tamilnadu

img

பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றும் வரை ஓயமாட்டோம்!

சென்னை, செப். 7- பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்  றும் வரை ஓய மாட்டோம் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். 88 ஆண்டு விடுதலை பத்திரிகை யின் ஆசிரியராக தொடர்ந்து 60  ஆண்டு காலம் பணியாற்றி வரும்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிக்கு பாராட்டு விழா திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் சென்னையில் செவ்வாயன்று (செப். 6) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசு கையில்,“ இட ஒதுக்கீடு பிரச்சனை, வர்ணாஸ்ரமம், மநு நீதி அநீதிகள் குறித்து எவ்வளவு கடினமான பிரச்ச னையாக இருந்தாலும் அதை எளிமை யாக அனைவருக்கும் புரியும் வகை யில் எழுதக் கூடியவர், பேசக்கூடியவர் ஆசிரியர் கி.வீரமணி” என்றார். பொதுக்கூட்டம், அரங்கக் கூட்டம்,  ஆலோசனைக் கூட்டம் என எந்த கூட்டத்தில் பேசினாலும் உரிய தரவுகளுடன், ஆதாரங்களுடன் பேசுவார்.

88 ஆண்டுகால விடுதலை ஏட்டின் ஆசிரியராக அவர் தொடர்ந்து 60 ஆண்டுகள் பணிபுரிவதற்கு காரணம்  அவருடைய சிறந்த பண்புகள்தான். பத்திரிகையை நடத்துவது என்பது  சாதாரண விஷயமல்ல. தினசரி ஒரு  பத்திரிகை அச்சாகி வெளிவருவது என்பது பிரசவ வலி போன்றது.  அதை விடக் கடினமானது அதை விநியோகம் செய்வது என்றும் கூறினார். இந்தியாவில் பிற்போக்குத் தனமான வலதுசாரி பாசிச ஆட்சி  நடந்து கொண்டிருக்கிறது. நாட்டின்  அடிப்படை விழுமியங்கள் நசுக்கப் பட்டு வருகின்றன, ஜனநாயக உரிமை கள், எழுத்துரிமை, பேச்சுரிமை பறிக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்  கட்சிகளை குறி வைத்து தாக்குகின்ற னர்.

இப்படிப்பட்ட அணுகுமுறையை மேற்கொண்டு வரும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்கு சவால் விடும் களமாக தமிழகம் இருக்கிறது என்றும் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை ஓயமாட்டோம் என 89  வயதிலும் ஆசிரியர் பணியாற்றி வருகிறார் என்றால் அதற்கு காரணம் அவர் ஏற்றுக் கொண்ட தத்துவம்தான் என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறினார். திமுக துணைப் பொதுச் செயலா ளர் ஆ.ராசா எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மனித நேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஆகியோரும் பேசி னர். ஆசிரியர் கி.வீரமணி ஏற்புரை யாற்றினார்.

;