tamilnadu

உலகச் செய்திகள்

நுகர்வுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவ னங்கள் புதுமையான பொருட்களை உருவாக்க வேண்டும் என்று சீனாவின் தொழில்துறை அமைச்ச கம் வலியுறுத்தியுள்ளது. தூய்மைப்பணியை மேற் கொள்ளும் எந்திர மனிதன் போன்றவற்றை சுட்டிக் காட்டியுள்ள அமைச்சகம், இதுபோன்ற புதுமையான பொருட்களின் உற்பத்தி ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

உலகிலேயே முதன்முதல் முக மாற்று அறுவைச் சிகிக்சையை மேற்கொண்ட இசபெல்லே டினோய்ரே என்ற பெண்மணி மரணமடைந்துவிட்டார். 11 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு நடந்த அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு உலகம் முழுவதும் பலரும் தங்களுக்கு முக மாற்று அறுவைச் சிகிச்சையை செய்து கொண்டனர். கடந்த சில ஆண்டுகளாகவே இசபெல்லே உடல்நலமின்றி மருத்துவ சிகிச்சை  பெற்று வந்தார்.