tamilnadu

img

ரூ.105 கோடிக்கு ‘தூர்வாரிவிட்டோம்.... அமைச்சர் சொல்கிறார்...

மதுரை:
மதுரையில் மொத்தம் ரூ.105கோடிக்கு “தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளதாகவும், மாடக்குளம் கண்மாய் ரூ.85 லட்சத்தில் “தூர் வாரப்பட்டுள்ளதாகவும்” பரவைக் கண்மாய்க்கு ரூ.90 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்கே.ராஜூ கூறியுள்ளார்.

மதுரை பரவை கண்மாய், குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டுள்ளது. அதை ஆட்சியர் அன்பழகன் தலைமையில் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-மதுரை  பரவை கண்மாயின் முழுக் கொள்ளளவு 175.57 மில்லியன் கனஅடி. இதன் பாசன பரப்பு 366 ஏக்கர். தமிழக அரசின் குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் பரவை கண்மாயில் சுமார் 850 மீட்டர் நீளமுள்ள கரையை புனரமைக்கும் பணி, கண்மாயின் உட்புறத்தில் முட்புதர்களை அகற்றும் பணி, வரத்துவாய்க்கால் பணி மற்றும் மறுகால் வாய்க்கால் பணிகள்  என ரூ.90 லட்சம் செலவில் நடந்து முடிந்துள்ளது. அதில்15 சதவீதம் அளவுக்கு முட்புதர்கள் அகற்றும் பணி உள்ளது.இந்த குடிமராமத்துப் பணி காரணமாக நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்மாயில் முழுக் கொள்ளளவிற்கு தண்ணீர் நிறைந்துள்ளது. அதனால் இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. விவசாயிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கிடைத்துள்ளது. இந்தக் கண்மாய் போல் மதுரையில் ரூ.105 கோடி மதிப்பில் கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் நிலைகள் உயர்ந்துள்ளது.

மழைக் காலத்தில் நீர் வீணாகாமல் சேமிக்கப்படுகிறது. இந்த குடிமராமத்து பணியை சிறப்பாக செய்வதற்கு உத்தரவிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இரண்டாம் கரிகாலசோழனாக பார்க்கப்படுகிறார். இந்த குடிமராமத்துப் பணிகள் எந்தவித குறுக்கீடும் இல்லாமல் நடக்கிறது.அந்தந்த கிராம சங்கங்கள் மூலம் பணிகள் நடந்துள்ளது. கொடிமங்கலம் அருகில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. அதன் மூலம் கொடிமங்கலம், துவரிமான், மாடக்குளம், கருமாத்தூர் 
ஆகிய கண்மாய்களில்தண்ணீர் நிறைந்துவிடும். மாடக்குளம் கண்மாய்நிரம்புவதால் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து விடும். ஏற்கனவே ரூ.85 லட்சம் செலவில் மாடக்குளம் கண்மாய் தூர்வாரப்பட்டு உள்ளது. மதுரையில்ரூ.105கோடி மதிப்பில் கண்மாய்கள்தூர்வாரப்பட்டு நீர் நிலைகள் உயர்ந்துஉள்ளது. தூர் வாரப்பட்டுள்ள கண்மாய்களை நம்பி விவசாயிகள் விவசாயம் செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் பேட்டியும்... யதார்த்தமும்
அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் பேட்டி குறித்து மாடக்குளத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் “பளிச்சென” அளித்த பதில்:

கடந்தாண்டு ரூ.85 லட்சம் செலவில் மாடக்குளம் கண்மாய் தூர்வாரப்பட்டதை அமைச்சர் மீண்டும் நினைவுபடுத்தியிருக்கிறார். கண்மாய் கரையை உயர்த்தினார்கள், மடைகளை சீரமைத்தார்கள். அதிகபட்சமாக 100 அடி தூரத்திற்கு தடுப்புச்சுவர் கட்டியுள்ளனர் என்பது உண்மைதான். ஆனால், ரூ.85 லட்சம் செலவு என்பது....? மாடக்குளத்திலிருந்து செல்லும்வரத்துக்கால்வாய்களில் ஒன்று துரைசாமி நகர். இது நகர்  மாயமாகிவிட்டது. இந்த வரத்துக்கால்வாய் வழியாக கிருதுமால் நதிக்கு தண்ணீர் செல்வதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.  தற்போது பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அதை உடனடியாக சீரமைக்க வேண்டும். கரம்பை மண் என்பதால் மழை பெய்தால் மண் அரிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க கிராவல் மண் அடிக்க வேண்டும்.அச்சம்பத்திலிருந்து முனியாண்டிபுரம், அச்சம்பத்து முதல் திருப்பரங்குன்றம்வரை கண்மாய்கரையை “பக்காவாக”சீரமைத்தால் நடை பயிற்சி மேற்கொள்ளலாம்.

அச்சம்பத்திலிருந்து திருப்பரங்குன்றத்திற்கு எளிதில் செல்லலாம். விபத்துகள் குறையும், இரு சக்கரவாகனங்களை மட்டும் முதற்கட்டமாகஅனுமதித்தால்போதும்.   இந்தப் பணியோடு துரைச்சாமி நகர் அருகேமாயமான வரத்துக்கால்வாயை கண்டறிந்து கிருதுமால் நிதியோடு இணைத்திருந்தால் ஒரு வேளை ரூ.85 லட்சம்செலவழிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி ஏதும் நடைபெறவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

==நமது நிருபர்===

;