யூடியூப் கிரியேட்டர்களுக்கு எச்சரிக்கை!
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மற்றும் வலைத்தளங்க ளை விளம்பரப்படுத்தும் யூடியூப் கிரியேட்டர்கள் (Youtube Creators) தடை செய்யப்படுவார்கள் என யூடியூப் எச்சரித்துள்ளது. டிஜிட்டல் இந்தியா ஃபவுன்டேஷன் (Digital India Foundation) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சமூக வலைத்தளங்களில் செய்யப்படும் விளம்பரங்கள் மூலம் 3 மாதங்களில் 42.8 மில்லியன் பேர், 4 சட்டவிரோத சூதாட்ட தளங்களுக்குச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டங்கள் மூலம் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்தவர்கள், மன உளைச்சல் காரணமாக தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சட்டவிரோத விளம்பரங்களைக் கட்டுப்படுத்த, யூடியூப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 19-ஆம் தேதி முதல், சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மற்றும் வலைத்தளங்களை வாய்மொழியாக விளம்பரப்படுத்தினாலோ, கூகுள் அங்கீகரிக்காத ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் இலச்சினை மற்றும் இணைப்புகளை வீடியோவில் காண்பித்தாலோ, அந்த யூடியூப் கிரியேட்டர்கள் (Youtube Creators) தடை செய்யப்படுவார்கள் என யூடியூப் எச்சரித்துள்ளது.
விரைவில் வெளியாகிறது ஐஓஎஸ் 18.4 ஐஓஎஸ்
18.4 மற்றும் ஐபேட்ஓஎஸ் 18.4 ஆகியவை வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐஓஎஸ் 18.4இல், ஆப்பிள் நுண்ணறிவு மேம்படுத்தல்கள் (Apple Intelligence upgrades), ஸ்மார்ட்டர் அறிவிப்புகள் (smarter notifications) மற்றும் பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், ஜப்பனீஸ் மற்றும் சைனீஸ் மொழிகள் இணைப்புகளுடன் வெளியாகிறது. 2025-ஆம் ஆண்டில், ஆங்கிலம் (இந்தியா, சிங்கப்பூர்), இத்தாலியன், கொரியன், போர்த்துகீசியம் மற்றும் வியட்நாமிய மொழிகளின் இணைப்புகளும் படிப்படியாக வழங்கப்பட உள்ளது. இந்த ஐஓஎஸ் 18.4, ஐபோன் XR, ஐபோன் SE (2வது மற்றும் 3வது தலைமுறை) முதல் ஐபோன் 16, 16 பிளஸ், 16 ப்ரோ, 16 ப்ரோ மேக்ஸ் வரையிலான போன்களில் பயன்படுத்த முடியும். எனினும், ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்கள் ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 16 மாடல்களில் மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கைப் சேவை நிறுத்தப்படுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு!
கைப் (Skype) சேவை வரும் மே 5-ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்கைப் சேவை கடந்த 2003-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்கப்பட்டது. கூகுள் மீட் (Google Meet), வாட்ஸ்அப் (Whatsapp) ஆகிய தளங்களைப் போலவே ஸ்கைப்பிலும், உலகில் வெவ்வேறு நாடுகளில் உள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளையும், குரூப் அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும். இதில் படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் போன்ற வற்றை எளிதாகப் பகிர முடியும். இந்நிலையில், ஸ்கைப் (Skype) சேவை வரும் மே 5-ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, மைக்ரோசாப்ட் டீம்ஸ் (Microsoft Teams) என்ற செயலியை பயன்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் பயனர்களுக்குப் பரிந்துரைத்துள்ளது. ஸ்கைப் அக்கவுண்ட் மூலம் இலவசமாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் அக்கவுண்ட்டை தொடங்கலாம் என்றும், இதன் மூலம் உங்கள் ஸ்கைப் சாட்கள் மற்றும் அழைப்புகள், மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியிலும் தோன்றும் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம்