tamilnadu

img

உரிமைகளுக்காக குரல்கொடுத்த மாற்றுத் திறனாளிகளை கைது செய்த காவல்துறை....

மதுரை:
மாற்று திறனாளிகள் உதவித்தொகை ரூ.3ஆயிரம், கடும் ஊன முற்ற  மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும்.  ஐந்து சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில்  மறியல் நடைபெற் றது.பேரையூர் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளர் வி.முருகன்  நாகப்பாண்டி, திருக்கராஜ், ஆகியோர் உட்பட 180-க்கும் மேற்பட்டமாற்றுத் திறனாளிகள் மறியலில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகம்முன்பு மறியல் நடத்திய மாநிலச் செயலாளர் பி.முத்துகாந்தாரி, நாகராஜ்  சின்னச்சாமி உட்பட 150-க்கும் மேற் பட்டோர் கலந்துகொண்டனர்.வாடிப்பட்டி தாலுகா அலுவலகம்முன்பு மறியலில் ஈடுபட்ட அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் கே.தவமணி, சி.பஞ்சம், கோபாலகிருஷ்ணன் ஆர்.திருநாவுகரசு உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.மதுரை மாநகரில் மறியலில் ஈடுபட்ட மாவட்டச்  செயலாளர் பி.வீரமணி பொருளாளர் வி. மாரியப்பன்,மாவட்ட நிர்வாகிகள் டி.குமரவேல்,பாண்டி, தங்கவேல், மாரியப்பன், பழனியம்மாள் உள்ளிட்ட கலந்துகொண்டனர் மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.மறியலில் ஈடுபட்ட 500 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர்
சாத்தூரில் மாவட்டத் துணைத் தலைவர் அழகுராணி, மாவட்ட நிர்வாகி கேஆரோக்கியராஜ், அருப்புக்கோட்டையில் மாவட்டத் தலைவர் குமரசேன், மாவட்டப் பொருளாளர் எம்.சுந்தரபாண்டியன், சுரேஷ் குமார் ஆகியோர் தலைமையில் மறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.இராஜபாளையத்தில்  மாவட்டச் செயலாளர் கே.நாகராஜ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் எம். சுப்பிரமணியன், பாலகிருஷ்ணன், ராஜம் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  சேத்தூரில்  கணேசன் தலைமையில் நடைபெற்ற மறியல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ராமர்,ஒன்றியச் செயலாளர் தங்கவேல்  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;