புதுதில்லி, டிச.23- அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பகுதிக்கு அருகே உள்ள தலித் மக்களு க்கு சொந்தமான நிலங்களை பாஜக தலை வர்களும் உயர் அதிகாரிகளும் அபகரித்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியதை அடுத்து, கோயில் இடத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலை வில் உள்ள பர்ஹட்டா மாஞ்சா கிராமத்தில் பாஜக தலைவர்களும் அதிகாரிகளும் அவர்களது உறவினர்களும் நிலம் வாங்கி குவித்தனர். அயோத்தி பாஜக எம்எல்ஏ வேத் பிர காஷ் குப்தா, கோசாய் கஞ்ச் முன்னாள் பாஜக எம்எல்ஏ பிரதாப் திவாரி, அயோத்தியின் முன்னாள் தலைமை வருவாய் அதிகாரி புருஷோத்தம் தாஸ் குப்தா, உபி கேடர் ஐஏஎஸ் அதிகாரி உமாதர் திவேதி, அலிகார் டிஐஜி தீபக் குமார்,
அயோத்தி மேயர் ஹரிஷ் குமார், அயோத்தி முன்னாள் சார்பு நீதிபதி ஆயுஷ் சவுத்ரி, தகவல் ஆணையர் ஹர்ஷ்வர்தன ஷாஹி உள்ளிட்டோர் சொந்த பெயர்களிலும் உறவினர்கள் பெயரிலும் இங்கு நிலம் வாங்கியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் செய்தி வெளி யானது. உத்தரபிரதேச வருவாய் குறியீடு மற்றும் ஜமீன்தாரி தடை சட்டத்தின்படி, தலித் அல்லாதவர்கள் தலித் மக்களின் விவசாய நிலங்களை மாவட்ட ஆட்சியரின் அனுமதி யின்றி வாங்கக் கூடாது. மகரிஷி ராமாயண வித்யாபீடம் (எம்ஆர்விடி) அறக்கட்டளை 1990களில் பர்ஹட்டா மாஞ்சா கிராமத்தில் சட்டவிரோதமாக நிலங்களை வாங்கிக் குவித்தது.
1990களில், பர்ஹட்டா மாஞ்சா கிராமத்தில் 15 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை ரோங்ஹாய் என்ற தலித் பெயரில் அறக்கட்டளை வாங்கியது. 1996 ஆம் ஆண்டில், ரூ. 6.38 லட்சத்திற்கு ரோங்காய் நிலத்தை அறக்கட்டளைக்கு “தானமாக” வழங்கியதாக ஆவணங்களில் கூறப்படு கிறது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு இந்த நிலங்களை பாஜக தலைவர்களுக்கும் அதி காரிகளுக்கும் அறக்கட்டளை மறு விற்பனை செய்துள்ளது. அறக்கட்டளை சுருட்டிய கோடிக்கணக்கில் பெறுமானமுள்ள நிலத்தை மறுவிற்பனை செய்யப்பட்டதை அறிந்த தலித் குடும்பங்கள் புகார் அளித்தபோதிலும் பலன் கிடைக்கவில்லை. இந்த புகாரை விவாரித்த அதிகாரிகள் உட்பட நில அபகரிப்பில் சம்மந்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.