tamilnadu

img

ஜப்பான் சில்லரைத் துறையில் செல்வாக்கு வியட்நாம் சாதனை

ஹனோய், மார்ச் 10- ஜப்பானில் நடைபெற்று வரும் உணவுப் பொருட்கள் திருவிழா-2022ல் வியட்நாம் பொருட்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் தொடர்பான வர்த்தகத்தை விரிவாக்கும் நோக்கத்துடன்  ஜப்பானில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 1976 ஆம் ஆண்டு முதல் இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் 47வது நிகழ்வாக நடத்தப்பட்ட திருவிழாவில் வியட்நாம் பொருட்களுக்கு பெரிய அளவில் வர வேற்பு இருந்தது. அந்தப் பொருட்கள் மீது ஜப்பான் நிறுவனங்கள் பெரும் ஆர்வம் காட்டின. பல்வேறு நாடுகள் இந்த நிகழ்வில் பங்கேற்று தங்கள் பொ ருட்களை பிரபலப்படுத்த முனைந்துள் ளன. வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் ஜப்பா னியரான சய்டோ யசோ, “வியட்நாம் பழங்களை ஜப்பானுக்குக் கொண்டு வருவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். விவசாய விளைபொருட்களை பரி மாறிக் கொள்வதில் இரு நாடுகளும் மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும்” என்றார்.

இவர் மட்டுமல்ல, மேலும் ஏரா ளமான ஜப்பானிய இறக்குமதியாளர்கள் வியட்நாம் உணவுப் பொருட்கள் மீது ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். ஜப்பானியர்களின் சுவைக்கேற்றாற் போன்று வியட்நாம் தயாரிப்புகள் இருக்கி றது என்று குறிப்பிட்ட ஜப்பானுக்கான வியட்நாம் தூதுவர் வு ஹாங் நாம், “பெருந்தொற்று காரணமாக ஏராளமான  வியட்நாம் நிறுவனங்கள் இந்தக் கண் காட்சியில் பங்கேற்க இயலவில்லை” என்று தெரிவித்தார். ஜப்பானுக்கு உண வுப் பொருட்கள் ஏற்றுமதி செய்வது பற்றிப் பேசிய வியட்நாம் வர்த்தகத்துறை அதிகாரிகள், “வியட்நாமிலிருந்து ஏற்று மதியாகும் அனைத்து உணவுப் பொ ருட்களும் ஜப்பானின் சுகாதாரப் பாது காப்புத் தரத்தைக் கொண்டவையாகும். அதிகாரப்பூர்வ வழியில்தான் அனைத் துப் பொருட்களும் அனுப்பப்படுகின் றன” என்றனர்.  அலைபேசிகள், ஒளிபரப்புக்கரு விகள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்வில் முன்னணியில் இருக்கும் வியட்நாம், ஜப்பானின் சில்லரை வர்த்த கத் துறையில் உணவுப் பொருட்கள் விற்ப னையில் குறிப்பிட்ட இடத்தைப் பிடித்திருக்கிறது. பெருந்தொற்றால் இரண்டு ஆண்டுகளாக பாதிக்கப்பட்டி ருந்த நிலையில் நடப்பாண்டில் வியட் நாம் பொருளாதாரமும் 5.5 விழுக்காடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.