சென்னை,அக்.22- மூத்த பத்திரிகையாளர் எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தி யில், “மூத்த பத்திரிகையாள ரும், ‘இண்டர்ஸ்ட்ரியல் எகனா மிஸ்ட்’இதழின் ஆசிரியர் மற்றும் பதிப்பாளருமான எஸ்.விஸ்வநாதன் (84) திடீர் உடல்நலக் குறைவையடுத்து மறைவெய்தினார் என்று அறிந்து வேதனையடைந் தேன். சென்னையிலிருந்து வெளிவரும் தொழில்துறை சார்ந்த ‘இண்டர்ஸ்ட்ரியல் எகனாமிஸ்ட்’ இதழை அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாகத் திறம்பட நடத்தி வந்த விஸ்வநாதன் இந்திய மாநிலங்கள் மட்டுமல்லாது, பல்வேறு உலக நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள தொழிற்திட்டங் களை ஆழமாக அறிந்து கொண்டு பல கட்டுரைகளை வழங்கியவர் ஆவார். வயதை மீறிய சுறுசுறுப்பு டனும் ஆர்வத்துடனும் இயங்கி வந்த அவரது மறைவு ஊடகத்துறைக்குப் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத் தினருக்கும் சக பத்திரிகைத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட் டுள்ளார். அமைச்சர் மூத்த பத்திரிகையாளர் விஸ்வநாதன் மறைவுக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநா தனும் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட் டிருக்கிறார்.