tamilnadu

img

புட்டுத்தோப்பு நியூ மெட்ரோ ஸ்டேசனில் வந்திக்கிழவி வந்திறங்க வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நகரத்தை குறுக்கும் நெடுக்குமாக மெட்ரோ ரயில்கள் பாய்ந்து கடக்கும் காட்சியைக்காண வெகுகாலம் காத்திருக்கக்கூடாது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;
14 ஆவது பன்னாட்டு ரயில் தளவாட கண்காட்சி (IREE - International Rail Equipments Exhibition) டிசம்பர் 16 முதல் 18வரை டெல்லியின் பிரகதி உள்ளரங்கில் நடைபெற்று வருகிறது.
ஆசியாவின் மிகப்பெரிய ரயில் கண்காட்சிகளில் ஒன்றான இது இந்திய தொழிற் கூட்டமைப்பும்(CII) ,இந்திய ரயில்வே துறையும் (Railway Board),இணைந்து நடத்துவதாகும். உலகின் பல நாடுகளை சேர்ந்த முன்னணி ரயில் மற்றும் ரயில் தளவாட உற்பத்தியாளர்கள் இக்கண்காட்சியில் கலந்து கொள்கிறார்கள்.
மதுரையில் மெட்ரோ ரயில் சேவை அமைப்பது தொடர்பான சாத்தியப்பாடு குறித்த ஆய்வு (Feasibility report) நடத்தப்படும் நிலையில் இக்கண்காட்சியை பார்வையிடுவது அவசியம் என நினைத்து பங்கெடுத்தேன்.
மெட்ரோ ரயில் தயாரிக்கும் முன்னணி நிறுவனமும்,ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான BEML Ltd நிறுவனத்தின் அரங்கை பார்வையிட்டேன்.
அந்நிறுவனத்தின் உயரதிகாரிகளிடம் மெட்ரோ ரயில் திட்டங்களைப் பற்றியும், அதன் பல்வேறு வகைகளைப் பற்றியும், இதுவரை அந்நிறுவனம் டெல்லி மெட்ரோ ( DMRC), கொல்கத்தா மெட்ரோ(KMRC),மும்பை மெட்ரோ(MRS1) போன்ற மெட்ரோ நிறுவனங்களில் செயல்படுத்தியுள்ள வேறு,வேறு மெட்ரோ முறைகளை (Metro systems) பற்றியும் விளக்கினர்.
மதுரைக்கு சாத்தியமான மெட்ரோ முறை பற்றியும் கலந்துரையாடினேன்.
டெல்லி மெட்ரோ, மும்பை மெட்ரோ போன்றவை 24 KV AC Overhead traction system முறையிலும், பெங்களூர் மெட்ரோ, கொல்கத்தா மெட்ரோ போன்றவைகள் 750 V DC Side rail collection முறையிலும் இயங்கும் முறைகள் பற்றியும் அந்நிறுவனத்தின், விளம்பரம் மற்றும் வர்த்தக பொது மேலாளர்  திரு.பூங்குமரன் விளக்கிக் கூறினார்.
மேலும் ஒன்றிய அரசு, Metro Policy 2017படி, இரண்டாம் நிலை நகரங்களுக்கு(Tier2 Cities) உகந்ததாக கூறும். (Metro system for less than 10000 PHPDT Peak hour peak direction traffic) Metro Lite மற்றும் Metro Neo முறை மெட்ரோ திட்டங்கள் பற்றியும் கூறினார். 
மேலும் இத்திட்டங்களின் சாதக,பாதக விசயங்கள் பற்றி அந்நிறுவனத்தின் பாதுகாப்புத்துறை இயக்குனர்(Director Defence) AK சிரிவட்சவ், சுரங்க மற்றும் கட்டுமான இயக்குனர்(Director Mining& Construction) ,திரு.எம்.வி.ராஜசேகர் ஆகியோர் விரிவாக விளக்கினர்.
மதுரை நகரத்தை குறுக்கும் நெடுக்குமாக மெட்ரோ ரயில்கள் பாய்ந்து கடக்கும் காட்சியைக்காண வெகுகாலம் காத்திருக்கக்கூடாது. இக்கனவு விரைவில் நிறைவேற வேண்டும்.
வைகை அடைய வந்திக்கிழவி புட்டுத்தோப்பு நியூ மெட்ரோ ஸ்டேசனில் வந்திறங்கும் காட்சி விரைவில் கைகூட வேண்டும்.

;