tamilnadu

img

அமெரிக்க டாலரின் மதிப்பு 10 ஆண்டுகளில் இல்லாத சரிவு

அமெரிக்க டாலரின் மதிப்பு  10 ஆண்டுகளில் இல்லாத சரிவு

வரி விதிப்பில் சீனா கொடுத்த பதிலடி

அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.  பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக் கான வரியை, அமெரிக்கா கடுமை யாக உயர்த்தியது. இந்தியாவுக்கும் 26  சதவிகிதம் அளவிற்கு வரி விதிக்கப்பட்டது. ஆனால், உலக  நாடுகள் மீதான இந்த வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி  வைப்பதாக அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனா ல்டு டிரம்ப், இது சீனாவுக்கு மட்டும் பொருந்தாது என கூறி னார். அதுமட்டுமன்றி சீனப் பொருட்களுக்கான வரி விதிப்பை, 34 சதவிகிதம், 84 சதவிகிதம் என அதிகரித்துக் கொண்டே சென்ற அவர், 125 சதவிகிதம் அளவிற்கு வரி  விதித்தார். பதிலுக்கு சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்  கான வரியை 125 சதவிகிதமாக உயர்த்தி பதிலடி கொடுத்தது. இதனால், அமெரிக்க டாலரின் மதிப்பு அடிவாங்கி யிருக்கிறது. கடந்த வாரம், சீன நாணயமான ‘யுவான்’ மதிப்பு, 11 ஆண்டுகளுக்கு முந்தைய மதிப்பிற்கு சென்றது. தற்போது  அமெரிக்க டாலரும் 10 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைக்குச் சென்றுள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்போடு ஒப்பிட்டுத் தான், உலக  நாடுகளின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது. அது போல, ஐரோப்பாவின் யூரோ மற்றும் ஸ்விஸ் நாட்டின் பிராங்  ஆகிய கரன்சிகளுடன் ஒப்பிட்டே அமெரிக்க டாலரின் மதிப்பை கணக்கிடுகிறார்கள்.  அந்த வகையில், ஸ்விஸ் நாட்டின் பிராங்குடன் ஒப்பிடு கையில், டாலரின் மதிப்பு கடந்த 2015ம் ஆண்டு இருந்த  அளவுக்கு சரிந்திருக்கிறது. யூரோவுடன் ஒப்பிடுகையில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தி ருக்கிறது.  “இப்போது நடந்திருக்கும் டாலரின் சரிவு என்பது சாதா ரணமானது கிடையாது. இது ஒரு டாலர் நெருக்கடி” என்று  நெதர்லாந்தை சேர்ந்த (Internationale Nederlanden Groep) வங்கியின் மாற்று நாணய நிபுணர் பிரான் சிஸ்கோ பெசோல் கூறியுள்ளார்.