tamilnadu

சிபிஎம் தலைவர்கள் முதல்வருடன் சந்திப்பு

சென்னை குடிசை மாற்று வாரிய தவணை முறை அறிவிப்புக்கு நன்றி

சென்னை, டிச. 24- சென்னை குடிசைமாற்று வாரிய வீடு களுக்கு எளிய தவணை முறை அறி வித்தது உள்ளிட்ட பல்வேறு நட வடிக்கைகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததோடு; பாலியல் வன் முறைகளுக்கு முடிவு கட்ட கடும் நட வடிக்கைகளை மேற்கொள்ளவேண் டும்; சர்க்கரை ஆலைகளை திறந்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்தனர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர்கள்.

முதல்வருடன் சந்திப்பு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா லினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் தலைமையில், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் பா.ஜான்சி ராணி, பி.டில்லிபாபு, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மறைந்த ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி, முதனை கோவிந்தன், சிதம் பரம் என்.பத்மினி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். பின்னர் இச்சந்திப்பு குறித்து  கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் களிடம் கூறியதாவது: முதல்வர், ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்தது மட்டுமல்லாமல் பழங்குடி மக்கள் வசிக்கக் கூடிய பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டது, அவர்களுக்கான பல்வேறு நடவடிக்கை களை மாநிலம் முழுவதும் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்தோம். ராசாக்கண்ணு மனைவி பார்வதிக்கு அவரது சொந்த ஊரில் வீடு கட்டி தரு வதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டி ருக்கிறார். காலதாமதமின்றி வீட்டை கட்டி கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். மேலும் பல  முக்கிய பிரச்சனைகளையும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

சர்க்கரை ஆலைகளைத் திறந்திட...

தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை ஈடுகட்டும் வகையில் கூடுதல் நிவார ணம் வழங்க வேண்டும் என்றும், அலங் காநல்லூர், ஆம்பூரில் மூடப்பட்டுள்ள சர்க்கரை ஆலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும், சாதிச் சான்றி தழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பழங்குடி மக்களுக்கான பல்வேறு பிரச்ச னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளோம். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட அவர்களது பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்றித்தர வேண்டும் என்றும், சிதம்பரம் பத்மினியின் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறோம். 

பாலியல் வன்முறைகளுக்கு முடிவு கட்ட...

மேலும் தமிழகத்தில்  குழந்தை களுக்கு, பெண்களுக்கு எதிரான பாலி யல் வன்முறை நாளுக்குநாள் அதி கரித்து வருவது, மனித சமூகத்திற்கே  வெட்கக் கேடான சம்பவமாகும். இதை தடுப்பதற்கு ஆக்கப்பூர்வமான நடவடி க்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், போக்சோ சட்டத்தை முழுமை யாக அமல்படுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கு தலைவர் இருந்தாலும் அவரது செயல்பாடு போதுமானதாக இல்லை. கடந்த 8 ஆண்டுகளாக ஆணை யத்திற்கு செயலாளர் நியமிக்கப்பட வில்லை. ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது. இன்றைக்கு குழந்தைகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவதை தடுப்ப தற்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணை யத்தை மேம்படுத்த வேண்டும், போக்சோ சட்டத்தை தீவிரமாக அம லாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி விரிவான தனி மனு அளித்துள்ளோம். (மனு முழு விபரம் : பக்கம் 8)

முதல்வருக்கு நன்றி

சென்னையில் குடிசை மாற்று வாரியத்தில் குடியிருந்தவர்கள், மீண்டும் அந்த வீட்டில் குடியேற 1.5 லட்ச ரூபாய்  பங்குத் தொகை செலுத்த வேண்டும் என்று கூறி னார்கள். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக, ஏற்கனவே அதிமுக அரசின் அரசா ணையை மாற்றி, அந்த  கட்டணத்தை குறைத்த தோடு மட்டுமல்லாமல், எளியதவணை அடிப்படை யில் மாதம் 250 ரூபாய்  செலுத்தினால்; போதும்  என்று அறிவித்திருக் கிறார்கள். பணம் செலுத்த வில்லை என்றாலும் பர வாயில்லை, முதலில் குடி யேறுங்கள் என்று அறி வித்ததற்கும் முதல மைச்சருக்கு நன்றி  தெரிவித்துக் கொண்டோம்.

நுண்நிதி நிறுவனங்கள்

 தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கத்தால் வாழ் வாதாரத்தை இழந்து தவிக்கும் சாதாரண ஏழை  எளிய பெண்களை நுண்நிதி கடன் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் வாட்டி வதைப்பது மட்டு மல்லாமல், மிகவும் கேவ லப்படுத்தும் நிலை உள்ளது. இவர்களின் தொல்லை தாங்காமல் சிலர் தற்கொலை செய்து கொண் டுள்ளனர். எனவே அந்த நுண்நிதி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலி யுறுத்தியுள்ளோம். நகைக்கடன் தள்ளுபடி நட வடிக்கையில் ஏஏஒய் கார்டு  வைத்திருக்கிற மிகவும் வறுமையில் இருப்ப வர்கள் ஒருமுறை கடன் பெற்றிருந்தால் கூட பொருந்தாது என்று அறி வித்திருப்பது முறையல்ல என்று தெரிவித்துள்ளோம். அளிக்கப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் உரிய  பரிசீலனை செய்து நடவ டிக்கை எடுப்பதாக முதல் வர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கே.பால கிருஷ்ணன் கூறினார்.


 

;