சென்னை,டிச.1- டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 12 எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: '
முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கும் ரயில்களின் விபரம் வருமாறு:
1. சென்னை சென்ட்ரல் - பெங்களூரு பிருந்தாவன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்(12639).
2. பெங்களூரு பிருந்தாவன் - சென்னை சென்ட்ரல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்(12640).
3. சென்னை சென்ட்ரல் - கோவை இண்டர்சிட்டி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்(12675).
4. கோவை - சென்னை சென்ட்ரல் இண்டர்சிட்டி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்(12676).
5. விழுப்புரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ்(16854). 6. திருப்பதி - விழுப்புரம் எக்ஸ்பிரஸ்(16853).
7. சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ்(16053). 8. திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்(16054).
9. சென்னை சென்ட்ரல் - திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ்(16057)
10.திருப்பதி சப்தகிரி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்(16058).
11.மங்களூரு சென்ட்ரல் - மட்கான் பாசஞ்சர் (56640).
12. மட்கான்- மங்களூரு சென்ட்ரல் பாசஞ்சர் (56641) இந்த 12 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டு இரண்டாம் வகுப்பு உட்கார்ந்து செல்லும் கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ரயில்களில் முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிய அமைச்சருக்கும் தெற்கு ரயில்வே அதிகாரிக்கும் கடிதம் எழுதி வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.