tamilnadu

தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை ஒன்றிய அமைச்சர் பகவந்த் குபா பேட்டி

மதுரை, அக்.3- ஒன்றிய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து  புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ரசாயனம் மற்றும் உரங்கள் துறை ஒன்றிய  இணை அமைச்சர் பகவந்த் குபா திங்க ளன்று  ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறி யதாவது: ஒன்றிய அரசின் திட்டங்கள் தமிழகத்தில்  எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என  விவசாயிகள், தொழிலாளர்கள், தெரு வோர  வியாபாரிகள், ஏழை பெண்களை நேரில் அழைத்து விவாதித்தோம். அப் போது ஒன்றிய அரசின் திட்டங்கள் முறை யாக செயல்படுத்துவது தெரிய வந்தது ஒன்றிய அரசின் திட்டங்கள் மூலம் 20 லட்சம் பேர் பல்வேறு திட்டங்களில் பயனடைந் துள்ளனர். விவசாயிகள் கிஷான்விகாஷ் திட்டத் தில் 89 ஆயிரம் விவசாயிகளுக்கு 6000 ரூபாய்  வழங்கப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தில் பலர்  பயன டைந்துள்ளனர். அன்னகல்யாண்  திட்டத் தில் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயன டைந்துள்ளனர். விவசாய காப்பீட்டு  திட்டத்  தில் மண்வளம் திட்டத்தின் மூலம் ஒரு  லட்சத்து 14 ஆயிரம் பேர், பெண்  குழந்தை கள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 23 ஆயிரம் பெண்  குழந்தைகள் பயனடைந்துள்ளனர். முத்ரா யோஜனா திட்டத்தில் நான்கு லட்சம் பேர் ரூ.1800  கோடி கடன் பெற்றுள்ளனர். பிரதமர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மக்கள் தினமும் ரூ.20 செலுத்தினால் இரண்டு  லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு தொகை பெறலாம். 51 ஆயிரத்து 451  கர்ப்பிணிகளுக்கு  ரூ.5000 வீதம் இதுவரை  26 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட் டுள்ளது.  யூரியா, டிஏபி போன்ற உரத்தட்டுப்பாடு இல்லை. தமிழகத்திற்கு உள்ள ஒதுக்கீடு கள்  ஒவ்வொரு ஒவ்வொரு மாதமும் முறை யாக வழங்கப்படுகிறது இதனால் விவசாயி களுக்கு சரியான  நேரத்தில் தேவையான உரங்கள் கிடைக்கும். போலி விதைகள் விற்பதாக தெரியவந்தால் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம் என்றார். பேட்டியின்போது மாவட்ட ஆட்சி யர்  எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணை யாளர் சிம்ரன்ஜித் சிங் காலோன், தேசிய எரிசக்தித் துறை இயக்குநர்  பலராம் ஆகி யோர் உடன் இருந்தனர்.