தஞ்சாவூர், அக்.15- தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட் டங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஒன்றியக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, 22 விழுக் காடு ஈரப்பதத்தை நிரந்தரமாக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை விடுத்தனர். டெல்டா மாவட்ட பாசனத்திற்காக, நடப்பாண்டு முன்கூட்டியே மே 24 இல், மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதை பயன்படுத்தி, 5.20 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி நடந்துள்ளது. நெல் கொள் முதல் மையங்கள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகளும் நடந்து வருகின்றன. இருப்பினும் டெல்டா மாவட்டங் களில் பெய்து வரும் மழையால், நெல் லின் ஈரப்பதம் 17 விழுக்காட்டிற்கு மேல் அதிகரித்தது. 17 விழுக்காடு வரை ஈரப் பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்பதால், விவசாயிகள் நெல்லை விற்க முடியாமல் தவித்து வரு கின்றனர். மேலும், ரஃபி பருவமான குறுவை அறுவடையின் போது, மழை யால் நெல்மணிகள் பாதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால், 22 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், 22 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கடிதம் அனுப்பியது.
இதையடுத்து, சனிக்கிழமை மத்திய உணவு கழகத்தின், ஹைதராபாத் உணவு தரக் கட்டுப்பாட்டு பிரிவு துணை இயக்குநர் எம்.இசட்.கான் தலைமை யில், மத்திய உணவுக் கழகத்தின் சென்னை உணவு தரக் கட்டுப்பாட்டு பிரிவு தொழில் நுட்ப அதிகாரி சி.யுனஸ், தமிழக நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மேலா ளர் (தரக் கட்டுப்பாடு) செந்தில், பொது மேலாளர் (வணிகம்) மகாலட்சுமி உள் ளிட்டோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் வண்ணாரப்பேட்டை நேரடி கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் விற்ப னைக்காக கொண்டு வந்துள்ள நெல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண் டனர். பின்னர், விவசாயிகளிடம் கோரிக் கைகளையும், தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் விளக்க மும் கேட்டறிந்தனர். தொடர்ந்து, ஆலக் குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி, சடையார்கோவில், பொன்னாப்பூர் நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, தஞ்சாவூர் ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நுகர் பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி உள் ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை மாவட்டங்களிலும் ஆய்வுக்காக மத்திய குழுவினர் சென்றனர். கல்விராயன்பேட்டை பெண் விவ சாயி பானுமதி கூறுகையில், “நெல் அறு வடை செய்த நாள் முதல் மழையால் மிக வும் அவதியாக உள்ளது. நெல்லை வெயிலில் உலர்த்தவே தனியாக ஆட்க ளுக்கு சம்பளம் வழங்க வேண்டியுள் ளது. தீபாவளி பண்டிகை மிகவும் சிறப்பு இல்லாமல் அமைந்து விட்டது. ஆண்டு தோறும் குறுவையின் போது மழையால் நெல் நனைந்து விடுவதை தொடர்ந்து சந்தித்து வருகிறோம்” என்றார். ஆய்வுக்குழு தகவல் நெல் மாதிரிகளை சேமித்து இந்திய உணவு கழக ஆய்வகத்தில் பரி சோதித்து, அதன் ஆய்வு அறிக்கை அடிப்படையில், நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்துவது குறித்த அறிவிப்பை, ஒன் றிய அரசு தெரிவிக்கும் என ஆய்வு குழு வினர் தெரிவித்துள்ளனர்.