திருவனந்தபுரம், ஜுலை 5- கேரளத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வியாழனன்றும் பரவ லாக மழை பெய்யும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. கடலோர பகுதியில் கடல் சீற்றம் கடுமையாக உள்ளது. செவ்வா யன்று மழைக்கு 2 பேர் உயிரிழந்தனர். இரண்டு பேர் காயமடைந்தனர். ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட ஒருவரை காணவில்லை. கொல்லம்-செங்கோட்டா ரயில் பாதையில் கரிகோடு அருகே தண்ட வாளத்தில் மரம் விழுந்தது. எர்ணா குளம், பனங்காடு, பாலாரிவட்டம், காலடி மேட்டூர், களமசேரி ஆகிய பகுதி களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோட்டயத்தில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மூன்று நிவா ரண முகாம்கள் திறக்கப்பட்டன. வைக்காடு மற்றும் பூஞ்ஞாறில் இரண்டு வீடுகள் இடிந்தன. பலத்த கடல் அலைகள் காரணமாக கோழிக்கோடு கடலுண்டி- சாலியம், எர்ணாகுளம் நைரம்பலம், கொல்லம் இரவிபுரம், அழிக்கல் பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்தது. மலப் புரம் பொன்னானி ஹிலார் பள்ளி மற்றும் மரக்கர் பள்ளியைச் சேர்ந்த 13 குடும்பங் கள் இடம் பெயர்ந்துள்ளனர். கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு கடற்கரையில் மீன்பிடிக்கக் கூடாது என தடை விதிக்கப் பட்டுள்ளது. கேரளா கடற்கரையில் 3.7 மீட்டர் உயரத்திற்கு அலைகள் உருவா கும். கடல் அரிப்புக்கு வாய்ப்புள்ளது. வருவாய்த் துறை அமைச்சர் ராஜன் தலைமையில் உயர்மட்டக் கூட்டம், நில வரத்தை மதிப்பீடு செய்தது. விடு முறையில் உள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் பணியில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பலியான இருவர்
இரிஞ்ஞாலக்குடா பாடியூரைச் சேர்ந்த வெரோன் (19) நண்பர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நீரில் சிக்கி உயிரிழந்தார். இவர் பாலி டெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். பாலக்காடு மாவட்டம் வடகஞ்சேரியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பள்ளரோட்டைச் சேர்ந்த தங்கமணி (53) தென்னை மரம் விழுந்து உயிரிழந்தார். கோழிக்கோடு கோடியாத்தூர் தெய்யாத்தும்காடு என்ற இடத்தில் ஆற்றின் நீரோட்டத் தில் சிக்கி சட்டப்பரத்தை சேர்ந்த உசேன் குட்டி (64) நீரில் அடித்து செல்லப்பட்டார். நிலச்சரிவு, மண்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் மலைப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப் பான இடங்களுக்கு செல்ல வேண்டும். கடல் தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதி களில் உள்ள மக்களும் இடம்பெயர வேண்டும். மலைப்பாங்கான பகுதிக ளுக்கு இரவு பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கைகள்
புதனன்று இடுக்கி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கையும், திருவனந்த புரம் தவிர இதர 12 மாவட்டங்களு க்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் (அதிகன மழை-115.6 மிமீ முதல் 204.4 மிமீ வரை) விடுக்கப்பட்டிருந்தது. வியாழனன்று மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு மாவட் டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.