ரயில் ஓட்டுநர்கள் 36 மணி நேர உண்ணாவிரதம்
புதுதில்லி, பிப். 20 - இந்திய ரயில்வேயில் பணியாற்றும் லோகா பைலட்டுகளின் 36 மணி நேர உண்ணாநிலைப் போராட்டம் துவங்கியது. லோகோ பைலட்டு களின் கோரிக்கைகள் தொடர்பாக ஒன்றிய ரயில்வே அமைச்சகம் மாற்றாந்தாய் மனப் பான்மையுடன் செயல்படு வதைக் கண்டித்து நடை பெறும் இந்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. தில்லியில் வியாழக் கிழமை காலை 7 மணிக்குத் துவங்கிய இப்போராட் டத்தில் நூற்றுக்கணக்கா னோர் கலந்து கொண்டுள்ள னர். எக்ஸ்பிரஸ்/பாசஞ்சர் ரயில்களில் வேலை நேர த்தை 6 மணி நேரமாகவும், குட்ஸ் ரயில்களில் 8 மணி நேரமாகவும் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும்; தொடர்ந்து இரவு - பகல் வேலை நேரம் அளிப்பதை வரை யறுத்துக்கொள்ள வேண்டும்; நாள்தோறும் 16 மணி நேரம் ஓய்வுடன், வாராந்திர ஓய்வும் அனு மதித்திட வேண்டும்; 36 மணி நேரத்திற்குப் பின் லோகோ பைலட்டுகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கும் விதத்தில் வேலை நேரம் ஒதுக்கப்பட வேண்டும் ஓடும் ரயில்களில் பயணம் செய்யும் ஊழியர்களை (RUNNING STAFF) 25 சத விகிதமாக உயர்த்திட வேண்டும்; காலியாகவுள்ள லோகோ பைலட் பணி யிடங்களை நிரப்பிட வேண்டும்; பழைய ஓய்வூதி யத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து இந்த உண்ணாநிலைப் போரா ட்டம் நடைபெறுகிறது. (ந.நி.)