tamilnadu

img

பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாட்டை நீக்கிடுக!

பழனி, அக்.21-  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பழனி  நகரக் கூட்டம் கவுரவ தலைவர் ஹரிகரமுத்து தலைமை யில் நடைபெற்றது. தலைவர் ஜே.பி.சரவணன் முன்னிலை  வகித்தார். கூட்டத்தில் ஆலோசகர்கள் சரவணப் பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், வள்ளுவர் தியேட்டர் உரிமையாளர் செந்தில்குமார், மருத்துவர் மகேந்திரன், செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் சங்கத்தின் 2 ஆம் ஆண்டு பொதுக்  குழு கூட்டத்தின் அழைப்பிதழ் வெளியீட்டு விழா நடை பெற்றது.  பின்னர் கவுரவ தலைவர் ஹரிகரமுத்து செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் சீன பட்டாசு களுக்கு தடை விதிக்க வேண்டும். தீபாவளியையொட்டி விதிக்கப்பட்டுள்ள பட்டாசு நேர கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். பழனி-ஈரோடு ரயில்பாதை திட்டத்தை உட னடியாக அமல்படுத்த வேண்டும். பழனியை தலைமை யிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும். பழனி-கொடைக்கானல் ரோப்கார் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.