tamilnadu

அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலை பற்றாக்குறையை ஈடுகட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிடுக!

சென்னை,பிப்.24- அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலை பற்றாக்குறையை ஈடுகட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரி முத லமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு  போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) மனு அனுப்பியுள்ளது. இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளர் கே. ஆறுமுகநயினார் ஆகியோர் அனுப்பிய மனு விபரம் வருமாறு: தமிழகத்தில் செயல்படும் 8 அரசு போக்கு வரத்துக் கழகங்கள் மக்களின் சேவைக்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி வருகின்றன.  கடந்த 1972ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்ற கழக அரசு தனியார் துறை பேருந்துகளை தேசிய மய சட்டத்தின் கீழ் கையகப்படுத்தி அரசு போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கப்பட்டன.  

போக்குவரத்துக் கழகங்கள் துவக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து 51வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளன.   இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் குறைந்த கட்டணத்தில் மிகச்சிறந்த போக்குவரத்து சேவை தமிழக மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.   ‘பெண்களுக்கு இலவச பயணம் வழங்கு வதால் அவர்களின் பொருளாதார நிலை மேம்படுகிறது.  எனவே அரசு இதை இழப்பாக கருதவில்லை’ என்ற முதல்வரின் கருத்து நூற்றுக்கு நூறு சரியானது.  நஷ்டத்தில் இயங்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நகர்ப்புற, மலைவழித்தடப் பேருந்து களால் ஏற்படும் இழப்பை அரசு ஈடுகட்டு வதில்லை.  

இதன் காரணமாகவே போக்கு வரத்துக் கழகங்கள் மிகப்பெரிய நிதி நெருக்கடி யில் உள்ளன.  நிதி நெருக்கடி காரணமாக போக்குவரத்துக் கழகங்கள் தமிழக மக்க ளுக்கு மேம்பட்ட போக்குவரத்து சேவை அளிப் பதில் பல்வேறு இடையூறுகள் உள்ளன. நிதி பற்றாக்குறை காரணமாக போக்கு வரத்து கழகங்களின் சேவை பாதிக்கப்படுவ தோடு, ஊழியர்களும் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.   ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட சேமிப்பு பணம் ரூ. 11 ஆயிரம் கோடி  போக்குவரத்துக் கழக நிர்வாகங்களால் செலவு  செய்யப்பட்டுவிட்டது.  

இதன் காரணமாக போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வுகால பலன்கள்கூட உடனடியாக கிடைப்பதில்லை. 7 ஆவது ஊதியக்குழு குறைந்தபட்ச ஊதிய மாக ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும் என நிர்ணயித்துள்ளது. (7வது ஊதியக்குழு சிபாரிசு  பக்கம் 65   Annexure to chapter 4.2) ஆனால் குறைந்தபட்ச ஊதியம்கூட போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஓட்டுனர், நடத்துனர் களுக்கு வழங்கப்படவில்லை. தமிழக அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஊதியம்கூட தினக்கூலி தொழிலாளர் களுக்கு வழங்கப்படுவதில்லை.  85 ஆயிரம்  ஓய்வூதியர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக  அக விலைப்படி உயர்வும் வழங்கப்படவில்லை. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சட்டப் பூர்வமாகவும், ஒப்பந்தப்படியும் வழங்கக் கூடிய பலன்களும் மறுக்கப்படுகிறது.  

எனவே போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும், ஊழியர் களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணவும், போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு  ‘பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி’ வழங்க வேண்டும். தமிழக அரசு நிறைவேற்றவுள்ள 2022-23ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இதற்கான தீர்வை ஏற்படுத்தித்தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மனுவின் நகல், நிதியமைச்சர், போக்கு வரத்துத்துறை அமைச்சர், நிதித்துறை கூடு தல் தலைமைச்செயலாளர், போக்குவரத்துத் துறை  முதன்மைச் செயலாளர், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோ ருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.