tamilnadu

img

தீபாவளி பண்டிகைக்கு ஜவுளி எடுக்க வர்த்தக பகுதிகளில் கூட்டம் அதிகரிப்பு

சென்னை,அக்.9-  தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.  இதையொட்டி புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்கு வதற்கு சென்னையில் தியாக ராய நகர், புரசைவாக்கம், பெரம் பூர், வண்ணாரப்பேட்டை உள்பட முக்கிய கடைவீதிகளில் ஞாயி றன்று (அக்.9) பொதுமக்கள் அதி களவில் கூடியிருந்தனர். தீபாவளிக்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே இருப்பதால் வரும் நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு பிக்பாக்கெட், வழி ப்பறி திருடர்களை கண்காணிப் பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற் கொண்டு வருகின்றனர்.  அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி பண்டி கைக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஞாயிற்றுக்கிழமை முதல் காவல்துறை கண் காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தியாகராய நகர் உள்பட அனைத்து கடைவீதிகளையும் போலீசார் கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் நகை களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். செல்போன் மற்றும் பர்ஸ் போன்ற உடைமை களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளையும் கையை பிடித்து அழைத்து செல்ல வேண்டும் என்று ஒலி பெருக்கி மூலம் போலீசார் தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகின்றனர்.

;