tamilnadu

img

‘பசியோடு உறங்கும் குழந்தைகள் கியூபாவில் இல்லை’

திண்டுக்கல், ஜுலை 12- பசியோடு உறங்கும் குழந்தைகள் கியூபாவில் இல்லை என்று லயன்ஸ் முன்னாள் ஆளுநர்  கூறினார்.  திண்டுக்கல் மதர் தெரஸா லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவ ராக எம்.பிரபாகரன், நிர்வாக செயலாளராக எஸ்.சைலேந்திரராய், செயல்பாடுகள் செயலாளராக ஜி. மணிப்பாண்டி, பொருளாளராக ஆர்.கஷ்மீர் அருண் ஆகியோர் பதவியேற்றனர். வறிய நிலையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு நிதி உதவி கள் வழங்கப்பட்டன.  முன்னாள் ஆளுநர் அறிவழகன் பேசுகையில், நான் ஏராளமான நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். நாங்கள் கியூபா நாட்டிற்கு ஒரு முறை சென்றோம். அங்கே காலடி வைத்தவுடன் அங்கு எங்களை வரவேற்ற ஒரு தகவல் பலகையை பார்த்தேன். ஒருவேளை உணவின்றி பசி யின்றி உறங்கும் குழந்தைகள் இங்கில்லை; என்ற வாச கம் எழுதப்பட்டிருந்தது. அது என்னை கவர்ந்தது. கியூபா வில் 99.8 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள். தனியார்  பள்ளிகள், கல்லூரிகள் அங்கு இல்லை. ஒரு சின்னஞ்சிறு நாடு கியூபா இன்றைக்கு அனைத்து வகையிலும் நல்ல  வளர்ச்சியடைந்து இருக்கிறது. அந்த நாட்டு மக்கள் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்கள் என்றார்.