tamilnadu

தீக்கதிர் மதுரை மண்டலச் செய்திகள்

மதுரை தீ விபத்தில் பலியான தீயணைப்பு வீரர்கள் குடும்பத்திற்கு உதவி

 திருவில்லிப்புத்தூர்:
மதுரையில் நவம்பர் 14-ஆம் தேதி ஜவுளி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில்  தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு  வீரர்கள்  கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.அவர்களது குடும்பத்திற்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பத்து தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் வீரர்கள், அலுவலர்கள்  ரூ.5 லட்சத்து 82 ஆயிரம் நிதி திரட்டியுள்ளனர். இந்த நிதி தீயணைப்புத்துறை இயக்குநர் மூலம் இருவரது குடும்பத்திற்கும் அளிக்கப்படும் என மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி கணேசன் தெரிவித்துள்ளார்.

                                 **********************

விபத்தில் ஒருவர் பலி

திருவில்லிபுத்தூர்:
திருவில்லிபுத்தூர் அருகே உள்ள பானாங் குளம் பகுதியில் வசித்து வந்தவர் தங்கமாரி (22) இவர் தமது இருசக்கர வாகனத்தில் சிவகாசிக்கு சென்று கொண்டிருந்தார்சிவகாசி பூவனதபுரம் விலக்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்திலிருந்து  தவறிவிழுந்தார். சிகிச் சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 

                                 **********************

பேருந்து முடக்கம்: தவிக்கும் மக்கள்

மதுரை:
மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கூறுகின்றன. ஆனால் கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்டு வந்தஅரசுப் பேருந்துகள் மட்டும் “கொரோனா”-விலிருந்து இன்னும் மீளவில்லை. இதனால் கிராமப்புறமக்கள் ஷேர் ஆட்டோக்களை நம்பியுள்ளனர். வசதியில்லாதவர்கள் நடந்தே பிரதான கிராமங்களுக்கு வந்து அங்கிருந்து பேருந்துகள் மூலம் மதுரை நகருக்கு வந்து கொண்டிருக்கின்றனர். மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான கிராமப்புறங்களுக்கு “இதுதான்” நிலை என்பதை போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் மறைக்காமல் ஒப்புக்கொண்டுள்ளார்.உதாரணத்திற்கு மதுரை கிழக்கு தாலுகாவிலுள்ள மாங்குளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்திற்கு அரசுப் பேருந்துகள் (24-எம்) இயக்கப்பட்டுவந்தன. “கொரோனா” குறைந்த நிலையிலும் இக் கிராமத்திற்கு பேருந்து செல்லவில்லை. இந்த மக்கள் இரண்டு கிலோ மீட்டர் நடந்து மாங்குளத்திற்கோ, மூன்று கிலோ மீட்டர் நடந்து பொருசுபட்டிக்கோ வந்துதான் பேருந்தில் பயணிக்க முடியும். இது ஒரு மலையோர கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.இதேபோல் மாங்குளத்திற்கு (24-எச்) யா.ஒத்தக்கடை, சிதம்பரம்பட்டி வழியாக  நாளொன் றுக்கு ஆறு முறை இயக்கப்பட்ட பேருந்து “கொரோனா”- முடக்கத்தால் முடக்கப்பட்டு தற்போது நாளொன்றுக்கு இரண்டு முறை மட்டுமே இயக்கப்படுகிறது.இது குறித்து போக்குவரத்துக்கழக அதிகாரியிடம் பேசியதற்கு, “அனைத்துப் பேருந்துகளும் முழுமையாக இயக்கப்படவில்லை” அதனால் தான் பிரச்சனை. அரசு உத்தரவிட்டால் கிராமப் புறங்களுக்கு பேருந்துகளை இயக்க தயாராக உள்ளோம் என்றார்.மதுரை ஆட்சியர் உடனடியாக தலையிட்டு மதுரை புறநகர் பகுதி கிராமங்களுக்கு இயக்கப் பட்டு வந்த அனைத்துப் பேருந்துகளையும் இயக்க உத்தரவிட வேண்டும்.இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர்எம்.ஆர்.விஜயபாஸ்கர் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, குறிப்பிட்டு கிராமத்தை கூறினால்இயக்குவதாகக் கூறினார். அவரிடம் மாங்குளத் திற்கு தொடர்ந்து  பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியதற்கு ஆவண செய்வதாகக் கூறியுள்ளார்.

                                 **********************

சாத்தையாறு அணையை கைவிட்ட தமிழக அரசு

அலங்காநல்லூர்:
வைகை-பெரியாறு அணைகளிலிருந்து பைப் லைன் மூலம் தண்ணீர் கொண்டுவந்து சாத்தையாறு அணையை நிரப்ப வேண்டுமென ஒரு புதிய யோசனையை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.சத்தையாறு அணையை தூர்வார வேண்டும்.அணையின் மையப்பகுதியிலுள்ள கரட்டைஅகற்றி கூடுதல் நீரை தேக்க வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் கூட அணையை பார்வையிட்டு ஆலோசனையை அங்கீகரித்தார். அதற்கு பின் அதிமுக ஆட்சியில் இதுவரை எதையும் செய்யவில்லை. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கருப்பையாவிடம் விவசாயிகள் அழாதகுறையாகக் கூறியும் கூட ஒன்றும் நடக்கவில்லை.தற்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினராக மாணிக்கம் உள்ளார். அவர் இந்த அணையைப்பற்றியும் சுற்றியுள்ள கிராம விவசாயத் தன்மையையும் நன்கு அறிந்தவர். தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. அவரும் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.இந்தாண்டு வடகிழக்குப்பருவமழை தொடங்கிவிட்டது. சாத்தையாறு அணை இன்றைக்கும் வறண்டே உள்ளது, இந்த நிலையில் சாத்தையாறு அணையில் 11 கிராம பாசன விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்  ரமேஷன் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வறண்டு காட்சியளிக்கும் சாத்தையாறு அணையை மாற்றியமைக்க வேண்டும்.  வைகை-பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை பைப் லைன் மூலம் சாத்தியாறு அணைக்குக் கொண்டு வந்து நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.சாத்தையாறு அணையை மேம்படுத்தி அணையில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அணையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.