tamilnadu

img

ஜனாதிபதிக்கும் காலவரம்பு நிர்ணயித்தது உச்சநீதிமன்றம்!

ஜனாதிபதிக்கும் காலவரம்பு நிர்ணயித்தது உச்சநீதிமன்றம்!

மாநில அரசின் மசோதாக்கள் மீது 3 மாதங்களில் முடிவு

மசோதாக்கள் மீது முடிவெ டுக்கும் விஷயத்தில், ஆளுநருக்கு  காலவரம்பு நிர்ணயித்து, உச்ச  நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பை அண்மையில் வழங்கியிருந்தது. இந்நிலையில்,  அந்த தீர்ப்பில், குடியரசுத் தலை வருக்கும் தற்போது காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதி ராக, தமிழக அரசு தொடர்ந்த வழக்  கில், கடந்த ஏப்ரல் 8 அன்று வழங்  கப்பட்ட 415 பக்க தீர்ப்பின் நகலை,  அனைத்து மாநில ஆளுநர் அலு வலகங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ளது. அத்துடன்,  தீர்ப்பு நகலை ஏப்ரல் 11 நள்ளிரவில்  இணையதளத்திலும் வெளியிட்டுள் ளது.

காரணத்தைக் கூற வேண்டும்

அதில், “மாநில அரசு நிறை வேற்றி ஆளுநருக்கு அனுப்பும் மசோதாக்களை, அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் பட்சத்தில்  குடியரசுத் தலைவர் அதன் மீது 3  மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். ஒருவேளை முடிவெடுக்க தாமத மானால், அதற்கு உரிய காரணத்தை  மாநில அரசுக்கு, குடியரசுத் தலை வர் தெரிவிக்க வேண்டும். காலக்  கெடுவிற்குள் குடியரசுத் தலை வர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றால் அவருக்கு எதிராக  மாநிலங்கள் நீதிமன்றத்தை நாட முடியும். மசோதா மீது எந்த நடவடிக்கை யும் எடுக்காமல் கிடப்பில் போட்டா லும் குடியரசுத் தலைவருக்கு எதி ராக நீதிமன்றத்தில் முறையீடு செய்ய மாநிலங்களுக்கு உரிமை உண்டு.

ஜனாதிபதிக்கும்  அதிகாரம் இல்லை

ஆளுநரைப் போலவே, குடி யரசுத் தலைவரும் மசோதாக்கள் மீது காலவரையின்றி முடிவெடுக்கா மல் ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்  படுத்த முடியாது. இந்த விவகாரத்தில் குடியரசுத்  தலைவர் குறிப்பிட்ட காலக்கெடு வுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்  பது சற்று சிரமமான விஷயம் தான்  என்றாலும், இதில், அவரது செய லற்றத் தன்மையை நியாயப்படுத்த முடியாது.  மாநிலங்களும் ஒத்துழைப்பு டன் செயல்பட வேண்டும். குடிய ரசுத் தலைவர் எழுப்பும் கேள்வி களுக்கு பதில்கள் வழங்க வேண்  டும். மேலும், மசோதா மீது ஒன்றிய அரசு அளித்த பரிந்துரைகளை மாநில அரசு விரைந்து பரிசீலிக்க வேண்டும்.

ஆலோசனை கேட்கலாம்

ஒருவேளை மாநில அரசின் மசோதா அரசியல் சாசனத்திற்கு எதி ராக இருக்கிறது என குடியரசுத் தலைவர் கருதினால், அவர் உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்கலாம்” என்று உச்ச நீதிமன்றம்  கூறியுள்ளது. தீர்ப்பில் இதுதொடர்பாக விரி வாக கூறப்பட்டிருப்பதாவது: அரசியலமைப்புப் பிரிவு 201-இன் கீழ், ஒரு மசோதா ஆளுநரால் தனது பரிசீலனைக்காக ஒதுக்கப்  பட்டவுடன், குடியரசுத் தலைவ ருக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று ஒப்புதலை வழங்குதல், இரண்டு நிறுத்தி வைத்தல். ஆனால், பல ஆண்டுகளாக ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடை யிலான உறவுகளில் வேறுபாடு களுக்குக் காரணமாக ‘பிரிவு 201’  இருந்து வருகிறது. மசோதா ஆளு நரின் பரிசீலனைக்கு ஒதுக்கப்  பட்டவுடன், குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்குவதையோ அல் லது நிறுத்தி வைப்பதையோ அறி விக்க வேண்டிய காலக்கெடு குறித்து குறிப்பிடப்படவில்லை.  

தேவையற்ற  தாமதம் சரியல்ல

பிரிவு 201-இல் குறிப்பிடப்பட் டுள்ளபடி குடியரசுத் தலைவரின் பரி சீலனைக்காக ஒதுக்கப்பட்ட எந்த வொரு மசோதாவும் அவரின் ஒப்பு தலைப் பெறாவிட்டால், சட்டமாக  மாற முடியாது. இதனால், குடிய ரசுத் தலைவர் முடிவெடுப்பதில் உள்ள நீண்ட மற்றும் தேவையற்ற  தாமதங்கள், மாநில சட்டமன்றத் தால் நிறைவேற்றப்பட்ட - மக்கள் விருப்பத்தின் வெளிப்பாடான மசோதாக்களை காலவரையற்ற மற்றும் நிச்சயமற்ற நிலையில் வைத்துள்ளது. இது சரியானதல்ல.  பிரிவு 201-இன் கீழ் ஒரு மசோதா  மீது முடிவெடுப்பதில், குடியரசுத்  தலைவரின் தரப்பில், எந்த நியா யமும் அல்லது தேவையும் இல்லா மல் தாமதப்படுத்துவது- ‘ஒரு அதிகாரத்தைப் பயன்படுத்துவது தன்னிச்சையாக வும், கேலிக்குரியதாகவும் இருக்கக்கூடாது’ என்ற அடிப்படை அரசியலமைப்பு கொள்கை யை மீறுவதாகும். இந்த செயலற்ற தன்மையின்  தாக்கங்கள், தீவிரமான இயல்புடையவை மற்றும் அரசியலமைப் பின் கூட்டாட்சிக் கட்ட மைப்பிற்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை.  சர்க்காரியா-புஞ்சி ஆணைய பரிந்துரைகள் இதனைக் கருத்தில் கொண்டு, பிரிவு 201-இன் கீழ் வேறுபாடுகளை அகற்றுவதற்கு திட்டவட்டமான காலக்கெடு வேண்டும் என்று சர்க்காரியா கமிஷன் பரிந்துரைத்தது. பிரிவு 201-இல் ஒரு காலக்கெடு வேண்டும் என்று புஞ்சி கமிஷனும் பரிந்துரைத்தது. அதேபோல, குடியரசுத் தலைவரின் ஒப்பு தலுக்காக அனுப்பப்பட்ட மாநில அரசின் மசோ தாக்கள் மீது முடிவெடுப்பது தொடர்பாக, 2016 பிப்ரவரி 4 அன்று உள்துறை அமைச்சகத்தால் இந்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் -  துறைகளுக்கு இரண்டு அலுவலக குறிப்பா ணைகள் வெளியிடப்பட்டன. அவை, குடியரசுத்  தலைவருக்கு ஒதுக்கப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க மூன்று மாத காலக்கெடு  நிர்ணயிக்கப்பட்டிருப்பதைத் தெளிவுபடுத்து கிறது. அவசரச் சட்டங்களுக்கான ஒப்புதலுக்கு மூன்று வார காலக்கெடுவை நிர்ணயிக்கிறது. காலவரம்பு நிர்ணயித்த ஒன்றிய அரசு 201-ஆவது பிரிவின் அவசர மற்றும் முக்கி யத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாகவே, ஒன்றிய அரசு கால வரம்புகளையும், பிரிவு 201- இன் கீழ் பிரச்சனைகள் எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என்பது குறித்து தெளிவான வழி காட்டுதல்களையும் வகுத்துள்ளது. இவை,  விரைவான அல்லது கறாரான காலக்கெடு  தேவை எனும் நோக்கத்துடன் ஒத்துப்போகிறது. அந்த வகையில், குடியரசுத் தலைவர் முடி வெடுக்கும் விஷயத்தில், உள்துறை அமைச்சகத் தால் பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவை ஏற்றுக்கொள்வது பொருத்தமானது என்று நாங்கள் கருதுகிறோம். ஆளுநரால் பரிசீல னைக்காக ஒதுக்கப்பட்ட மசோதாக்கள் மீது, பரிந்துரை பெறப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள், குடியரசுத் தலைவர் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்தக் காலகட்டத்திற்கு அப்பால் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், பொருத் தமான காரணங்களைப் பதிவு செய்து சம்பந் தப்பட்ட மாநிலத்திற்குத் தெரிவிக்க வேண்டும். அந்த காரணங்கள், மசோதாவை நிறுத்தி வைப்பதற்கான நியாயமான காரணங்களாக இருக்க வேண்டும். ஜனாதிபதிக்கு கட்டாயம் இல்லை அரசியலமைப்பின் பிரிவு 200 மற்றும் 201-இன் கீழ் முறையே ஆளுநர் மற்றும் குடி யரசுத் தலைவரின் அதிகாரங்களைப் பொறுத்தவரை, ஒரே ஒரு விதிவிலக்கு என்ன வென்றால், முந்தையதில், ஆளுநர் ஒரு மசோ தாவின் ஒப்புதலைத் தடுத்து நிறுத்தியிருந்தால், அத்தகைய மசோதா 2-ஆவது முறையாக அனுப்பி வைக்கப்படும்போது, அதற்கு ஆளு நர் கட்டுப்படுவார்.  ஆனால், பிரிவு 201-இன் அடிப்படையில் ஒப்புதலை வழங்குவது அல்லது நிறுத்தி வைப்பது என்பது, மாநிலங்களைப் பொறுத் தவரை சாதாரண சட்டம் இயற்றும் நடைமுறை யில் அல்லாமல், அசாதாரண சூழ்நிலையில் மட்டுமே எழக்கூடிய பிரச்சனை என்பதால், அரசி யலமைப்பு ரீதியாக மசோதாக்களுக்கு ஒப்பு தல் வழங்க வேண்டிய கட்டாயம் எதுவும் குடி யரசுத் தலைவருக்கு இல்லை.  உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கலாம் எனினும், அரசியலமைப்பின் பிரிவு 143- இன் கீழ் ஒரு மசோதா குறித்த சட்ட ஆலோச னையை குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றத் திடமிருந்து பெறலாம். இது கட்டாயம் அல்ல  என்றாலும், ஆலோசனை பெறுவது விவேக மான ஒரு நடவடிக்கையாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு,  அதன் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை குறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரம்  அரசியலமைப்பு நீதிமன்றங்களுக்கு உண்டு.  ஒரு தவறான மசோதா சட்டமாக மாறினால் இயற் கையாகவே பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.  எனவே, முன்கூட்டியே அத்தகைய ஒரு சட்டம்  இயற்றப்படாமல் தடுக்கப்படுமானால் அது நேரத்தையும், பொது வளங்களையும் மிச்சப் படுத்தும். மேலும், பொருத்தமான திருத்தங் களை சட்டமன்றம் மேற்கொள்வதற்கும் வாய்ப்பும் கிடைக்கும்.” இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.