tamilnadu

img

70.67 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா பாட நூல்கள்!

சென்னை, ஜூன் 8- தமிழ்நாட்டில் கோடை விடு முறை முடிந்து பள்ளிகள் திறக்கப்  படும் அன்றைய தினமே 70.76  லட்சம் மாணவர்களுக்கு விலை யில்லா பாடநூல் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறி வித்துள்ளது. இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் பள்ளிக் கல்வித்  துறையில் 2024-2025 ஆம் கல்வி யாண்டில் அனைத்து வகை அரசுப்  பள்ளிகள், அரசு உதவி பெறும்  பள்ளிகள், பகுதி நிதியுதவி பெறும்  பள்ளிகள் மற்றும் சுய நிதிப் பள்ளி களில்- மாநிலப் பாடத்திட்டத்தின்  கீழ் தமிழ்வழியில் இயங்கும் வகுப்பு  களில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை  பயிலும் மாணவ - மாணவிகளுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்த கங்கள், புத்தகங்கள், காலணி கள், காலேந்திகள் மற்றும் காலுறை கள், கம்பளிச்சட்டை, மழைக் கோட்டு, பூட்ஸ் மற்றும் காலுறை கள், சீருடைகள், வண்ணப் பென்  சில்கள், வண்ணக் கிரையான்கள், மிதி வண்டிகள், கணித உபகரணப்  பெட்டிகள் மற்றும் புவியியல் வரை படம் ஆகிய நலத் திட்டப் பொருட் கள் வழங்கப்படவுள்ளன. பள்ளிகள் திறக்கப்படும் நாளான ஜூன் 10 (திங்கட்கிழமை)  அன்றே மாணவர்களுக்கு இவற்றை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடப்புக் கல்வியாண்டில் பள்ளிக் கல்வியில் 70 லட்சத்து 67 ஆயிரத்து 94 மாண வர்களுக்கு விலையில்லாப் பாட நூல்களும், 60 லட்சத்து 75 ஆயி ரத்து 315 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களும், 8 லட்சத்து  22 ஆயிரத்து 603 பேருக்கு புவியி யல் வரை படமும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.