tamilnadu

img

சிறு, குறு தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க முதல்வரிடம் வல்லுனர் குழு பரிந்துரை

சென்னை,மார்ச் 16- கொரோனா பொதுமுடக்கத்தின்போது தமிழ்நாடு முழுவதும் சிறு, குறு தொழில்  நிறுவனங்கள் பலமாதகாலம் திறக்கப்படா மல் மூடப்பட்டன. இதனால் தொழில் நிறுவன உரிமையாளர்களும் தொழிலாளர்க ளும் வேலையில்லாமல் பெரும் அவதிப் பட்டனர். வாங்கிய கடனை திரும்பவும் செலுத்த முடியாமல் ஒட்டுமொத்தமாக சிறு,  குறுந்தொழில் முடங்கியது. மீண்டும் தங்களது தொழிலை துவங்குவதற்கு மாநில அரசு உதவி மற்றும் சிறப்பு சலுகை கள் வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறு, குறு தொழில் களை மீட்டெடுக்க தமிழ் வல்லுனர்குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு குறு,  சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்க ளின் முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளுடன் வல்லுனர்  குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:- கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு நலிவடைந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டுருவாக்கிட ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர்  என். சுந்தரதேவன் தலைமையில் “குறு,  சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்க ளின் புனரமைப்பு வல்லுநர் குழு” அமைகப் பட்டது. அந்த குழு புதனன்று(மார்ச் 16) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்  நிறுவனங்களின் பிரச்சினைகள் மற்றும் தேவையை அறிந்து கொள்ள, 16 தொழிற் துறை சங்கங்கள், 33 அரசுத் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், வங்கி அதிகாரிகள், நிதி நிறுவனங்கள். புத்தொழில்கள் சார்ந்த  வல்லுநர்கள் மற்றும் பல்துறை ஆலோச கர்கள் ஆகியோருடன் 60-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தியுள்ளது.

மேலும்,  குழு உறுப்பினர்களுடன் விவாதித்தும், ஆலோசனைகள் செய்தும், குறு, சிறு மற்றும்  நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளுடன் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்நிகழ்வின்போது, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளர் வி. அருண்ராய், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்கு நர் தாமஸ் வைத்யன், குழுவின் உறுப்பினர் கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.