tamilnadu

சிங்கப்பூரிலிருந்து வந்தவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை

நாகர்கோவில், 5- சிங்கப்பூரில் இருந்து நாகர்கோவில் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததை தொடர்ந்து அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.  அவை பரிசோதனைக்காக சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஞாயிறன்று பகல் அவரது ஆய்வு அறிக்கை குமரி மாவட்ட சுகாதாரத் துறைக்கு வந்தது.  அதில் அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என தெரியவந்தது.  தற்போது அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை தனிவார்டில் கொரோனா பாதிப்புக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.