பூக்கள் பூக்கும் தருணம் - எஸ்.பாலா
தமிழ்க்காரி எழுதி யுள்ள “பூக்கள் பூக்கும் தருணம்” நூல் சங்க இலக்கி யத்தின் குறுந்தொகையின் அகச்சித்திரத்தை நவீன கவிதை வடிவில் படைத்துள்ள சிறப்பான படைப்பாகும். சங்க இலக்கியங்களை வாசிக்க விரும்புவோருக்கு துவக்க நூலாக குறுந்தொகை பரிந்துரைக்கப்படுகிறது. அந்த குறுந்தொகையின் 30 பாடல் களை சமகால கவிதை மொழி யில் மீள்படைப்பு செய்துள் ளார் தமிழ்க்காரி. தமிழ்க்காரியின் எளிய நடை, நுவல் பொருளுக்கு நுட்பமும் தட்பமும் சேர்க்கிறது. குறுந்தொகை பாடல்களுக்கு இதுவரை ஆண் உரையாசிரியர்களே இருந்த நிலையில், தமிழ்க்காரியால் புதிய பரிணாமம் பெறுகிறது என தமிழச்சி தங்கபாண்டியன் தமது முன்னுரையில் குறிப்பிடுகிறார். நூலின் சிறப்பம்சங்கள்: - பாடல்களில் வரும் சொற்களுக்கான பொருள் விளக்கம் - பாடல்களின் விரிவான விளக்கம் - எளிய கவிதை வடிவில் மொழிபெயர்ப்பு - மொழி, பண்பாடு, வாழ்வியல், சூழலியல் கூறுகளின் பிரதிபலிப்பு - இசை, இயற்கை, உயிரினங்களுடனான தொடர்பு - அக வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் புற உலகுடன் இணைத்து பின்னப் பட்டுள்ளது. உதாரணமாக, “வானத்து எழும் சுவர் நல்இசை வீழப் பெய்த புலத்துப் பூத்த முல்லை” என்ற குறுந்தொகை பாடலை “மழை அணைத்த நிலமங்கை பெற்ற மலராத மலராகப் பூத்திடக் காத்து நிற்கும் பச்சை நிற அரும்பு முல்லை செடியில்...” என கவித்துவ அழகுடன் மொழி பெயர்த்துள்ளார். நூல் பேசும் முக்கிய கருத்துக்கள்: 1. உணர்வுகளின் பொதுமை: - அன்பு, அறம், வெட்கம் உள்ளிட்ட உணர்வுகள் ஆண்-பெண் என்ற பாகுபாடின்றி பொதுவானவை - கபிலரின் மடலேறுதல் பாடல் இதை உணர்த்துகிறது 2. காதலும் சமூகமும்: -சங்க காலத்தில் பெண்களின் தேர்வு உரிமை - காதலுக்கு எதிரான சாதி, மத, இன தடைகள் - தற்கால ஆணவக் கொலைகளுடன் ஒப்பீடு 3. இயற்கையும் வாழ்வியலும்: - நிலங்களின் தன்மையறிந்த வாழ்க்கை - உயிரினங்களுடனான புரிதல் - சமகால சூழலியல் பிரச்னைகள் நூலின் சிறப்பு குறுந்தொகையின் அகச் சித்திரத்தை மட்டும் முன்வைக்காமல், அதன் மூலம் சமூகவியல் கருத்துக் களையும் முன்வைக்கிறது. சங்க கால அக வாழ்வின் தன்மைகளை இன்றைய சமூகச் சூழலுடன் ஒப்பிட்டு காட்டுகிறது. குறிப்பாக காதலர்களுக்கு எதிரான சாதியக் கொடு மைகள், சூழலியல் நெருக்கடிகள் போன்ற வற்றை விமர்சன நோக்கில் பதிவு செய்கிறது. மொத்தத்தில் குறுந்தொகையின் அகச்சித்திரத்தை எளிமையாகவும் ஆழ மாகவும் புரிந்து கொள்ள உதவும் முக்கிய மான படைப்பு. சங்க இலக்கியத்தின் பெரு மைகளை அறிய விரும்பும் இன்றைய வாச கர்களுக்கு மிகவும் பயனுள்ள நூல்.
பூக்கள் பூக்கும் தருணம்
தமிழ்க்காரி
விலை ₹350
அந்தரி பதிப்பகம், கோவை
தொடர்புக்கு 7373736276
“தண்ணீர் என்றோர் அமுதம்” - எம்.ஜே.பிரபாகர்
மனித குலத்திற்கும் உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மிக அத்தியாவசியமான தண் ணீர் குறித்து 1930 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியரான சர் சி.வி.ராமன் எழுதிய முக்கியமான நூல் இது. எழுத்தாளர் கமலாலயன் தமிழில் மொழிபெயர்த்துள்ள இந்நூலை புக் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ளது. நாம் தினமும் ஏதாவது ஒரு வகையில் தண்ணீர் பிரச்ச னை குறித்த செய்திகளை கேட்டுக் கொண்டிருக்கிறோம். காவேரி நீர் பிரச்ச னை, முல்லைப் பெரியாறு பிரச்சனை என நீர் தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அத்தகைய சூழலில், அந்த காலகட்டத்திலேயே தண்ணீரின் எதிர்கால நெருக்கடிகளை உணர்ந்து சர் சி.வி.ராமன் இந்நூலை எழுதியுள்ளார் என்பது வியப்பளிக்கிறது. இன்று நாம் காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறோம். இயற்கைச் சூழல்கள் சீரழிக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக பருவமழை குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஒரு புறம் கடும் வெப்பமும், மறுபுறம் கடும் மழையும் பொழிகிறது. அதீத மழையால் மாநகரங்களும் கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்குகின்றன. ஆனால் இத்தனை மழை நீரையும் சேமிக்க முடியாமல் கடலில் கலக்க விட்டு விடுகிறோம். ஏராளமான ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் வீடுகளாகவும் அலுவலகங்களாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன. பெருநகரங்களில் மழைக்காலத்தில் வாகனங்களை பாதுகாக்க முயலும் மக்கள், மழை நீரை சேமிக்க எந்த முயற்சி யும் எடுப்பதில்லை என்பது கவலைக்குரியது. கடல் நீரை குடிநீராக மாற்றும் முயற்சிகள் சில நாடுகளில் நடந்து வரு கின்றன. இது போன்ற பல் வேறு விஷயங்களை சிறிய நூலில் மிக எளிமையாக விளக்கியுள்ளார் சர் சி.வி.ராமன். நீர் என்ற அமுதத்தை முறையாக பெற்று, முறையாக பயன்படுத்தி, முறை யாக சேமித்தால் மட்டுமே இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் சிரம மின்றி வாழ முடியும் என்ற முக்கியமான செய்தியை இந்நூல் வலியுறுத்துகிறது. குழந்தைகளும் மாணவர்களும் இந்நூலை கட்டாயம் வாசிக்க வேண்டும். நீர் பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள தயார் படுத்தும் இந்நூல், இன்றைய கால கட்டத்தில் மிகவும் தேவையான ஒன்றா கும். எளிய மொழியில், அறிவியல் பூர்வ மாக தண்ணீரின் முக்கியத்துவத்தை விளக்கும் இந்நூல் அனைவரும் படிக்க வேண்டிய அவசியமான படைப்பாகும்.
தண்ணீர் என்றோர் அமுதம்
நூலாசிரியர்: சர்.சி.வி.ராமன்
மொழியாக்கம் : எழுத்தாளர் கமலாலயன்
விலை : ரூபாய் 25/-
வெளியீடு: புக் ஃபார் சில்ரன்
சென்னை-600018
தொடர்பு எண்: 04424332924
பன்முகப் பார்வையில் அகில இந்திய வானொலி - எம்.ஜே.பிரபாகர்
இளைய தலைமுறைக்கு இந்திய வானொலியின் வரலாற்றை பதிவுசெய்வது என்பது மிகவும் அவசியமான பணியாகும். அத்த கைய முக்கியமான பணியை பேராசிரி யர் தங்க. ஜெய் சக்திவேல் “பன்முகப் பார்வையில் அகில இந்திய வானொலி” என்ற நூல் வாயிலாக நிறை வேற்றியுள்ளார். உலக வானொலிகள் குறித்த ஆய்வாளரும், பிபிசி உலக சேவையில் பணிபுரிந்தவரும், சென்னை பல்கலைக்கழக இதழியல் துறை பேராசிரியருமான இவர், வானொலியின் முழுமையான வரலாற்றை இந்நூலில் ஆவணப்படுத்தியுள்ளார். 360 பக்கங்கள் கொண்ட இந்நூல் மூன்று முக்கிய பிரிவுகளாக வடிவமைக்க ப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள், நேயர்கள், ஆய்வாளர்கள் என மூன்று தரப்பினரின் பார்வையில் வானொலியின் வரலாற்றை பதிவு செய்யும் விதமாக 46 அறிஞர்களின் கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் தொடக்கத்தில் மொத்தம் ஆறு வானொலி நிலை யங்கள் மட்டுமே இருந்தன. அவற்றில் இரண்டு - சென்னை மற்றும் திருச்சி நிலையங்கள் தமிழகத்தில் அமைந் திருந்தன. அன்றைய காலகட்டத்தில் அகில இந்திய வானொலி செய்திகள், கல்வி நிகழ்ச்சிகள், விவசாய நிகழ்ச்சிகள் ஆகியவற்றை பிராந்திய மொழிகளில் வழங்கி வந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட், ஒலிம்பிக் போன்ற விளையாட்டு நிகழ்வுக ளின் நேரடி வர்ணனைகள், உறங்க நாட கங்கள், குரு நாடகங்கள், விவசாயி களுக்கான நிகழ்ச்சிகள் என பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை வானொலி வழங்கியது. தென்கச்சி கோ. சுவாமி நாதனின் “இன்று ஒரு தகவல்”, சரோஜ் நாராயணசாமியின் ஆகாசவாணி செய்திகள், திரை கவனம் போன்ற நிகழ்ச்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அறிவியல் அறிவை பரப்புவதிலும் வானொலி முக்கிய பங்காற்றியது. இன்சாட் அறிவியல் மன்றம், கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் மூலம் மாணவர்களுக்கான அறிவியல் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பியது. செயற்கைக்கோள் ஏவுதலின் நேரடி வர்ணனை போன்ற முக்கிய நிகழ்வு களையும் மக்களுக்கு கொண்டு சென்றது. காலப்போக்கில் தனியார் வானொலிகள் உருவானாலும், அகில இந்திய வானொலியின் முக்கியத்துவம் குறையவில்லை. கொரோனா காலத்தில் சிற்றலை ஒலிபரப்பு நிறுத்தப்பட்டாலும், பேரிடர் காலங்களில் வானொலியின் பங்கு இன்றியமையாததாக இருந்தது. வானொலியின் வரலாற்றை மட்டு மல்லாமல், தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக மாற்றங்கள், கலாச்சார தாக்கங்கள் என அனைத்து கோணங்களிலும் இந்நூல் ஆவணப்படுத்தியுள்ளது. பொதுவாக வரலாற்று புத்தகங்களில் பதிவு செய்யப்படாத பல அரிய தகவல்களை யும் இந்நூல் கொண்டுள்ளது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வானொலி தனது முக்கியத்துவத்தை இழக்கவில்லை என்பதும், பேரிடர் காலங்களில் மக்களுக்கு முக்கிய தகவல் ஊடகமாக வானொலி திகழ்கிறது என்பதும் இந்நூலின் மூலம் புலனா கிறது. தொலைக்காட்சி, இணையம் போன்ற நவீன ஊடகங்கள் வந்த பிறகும் வானொலி ரசிகர்களின் எண்ணிக்கை குறையாமல் வளர்ந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 46 அறிஞர்களின் கட்டுரைகளை உள்ளடக்கிய இந்நூல், ஒவ்வொருவரின் பார்வையிலும் வானொலியின் வரலாற்றை, பங்களிப்பை, தாக்கத்தை விரிவாக பதிவு செய்துள்ளது. ஊடகவிய லாளர்கள், நேயர்கள், ஆய்வாளர்கள் என மூன்று வேறுபட்ட பார்வைகளில் வானொலியை ஆராய்ந்துள்ளது இந்நூலின் தனிச்சிறப்பாகும். இந்நூல் இளைய தலைமுறை யினருக்கும், ஊடகத்துறை மாண வர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மிகவும் பயனுள்ள வரலாற்று ஆவண மாக அமைந்துள்ளது. வானொலியின் தொடக்க காலம் முதல் தற்கால நிலை வரை முழுமையான பதிவுகளை கொண்டுள்ள இந்நூல், வானொலி ஊடகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அரிய படைப்பாகும். மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்நூலை கொண்டு சேர்ப்பது அவசியமான பணி யாகும். இந்நூலை தொகுத்த பேராசிரியர் தங்க. ஜெய் சக்திவேல் அவர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. வானொலி ஊடகத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தி, அதன் முக்கியத்து வத்தை எதிர்கால தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சி வெற்றி பெற வேண்டும். “பன்முகப் பார்வையில் அகில இந்திய வானொலி” பதிப்பாசிரியர் :தங்க. ஜெய்சக்திவேல் விலை : ரூபாய் 400/- வெளியீடு : டெஸ்லா பதிப்பகம் சென்னை-600004 தொடர்பு எண்: 9841366086.