tamilnadu

img

பள்ளிகளில் சாதிய பாகுபாடு: அமைச்சர் கடும் எச்சரிக்கை

சென்னை,செப்.19- தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பாஞ்சாகுளம் கிரா மத்தில் பட்டியலின மாணவர்க ளுக்கு தின்பண்டம் உள்ளிட்ட பொரு ட்களை வழங்க மறுத்த விவ காரத்தில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாஞ்சாகுளத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சாதிய பாகுபாடு காட்டப்பட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “ பாஞ்சா குளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப் பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் சாதிய பாகுபாடு கண்ட றியப்பட்டால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்” என்றார். சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.