சென்னை, டிச. 10 - சமூக அமைதியை சீர்குலைப் பதை தமிழக அரசு அனுமதிக்காது என்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். மூதறிஞர் ராஜாஜியின் 143ஆவது பிறந்த நாளையொட்டி பாரிமுனையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மரி யாதை செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்தநிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்பின் செய்தியாளர்க ளிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: சட்டம் ஒழுங்கு பராமரிப் பதில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
இதை சீர்குலைக்க சிலர் இணைய தளம் உள்ளிட்ட சமூக வலைத் ்தளங்களில் விஷமப் பிரச்சாரம் செய்கின்றனர். அதை தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக் காது. அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முறையாக வாடகை செலுத்தாமல் நீண்ட நாள் நிலுவையில் வைத்திருப்ப வர்கள், கோவில் நிலத்தை முறைகேடாக ஆக்கிரமித்தவர் கள் என இதுவரை 487 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சுமார் ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. ‘தமிழ் வழி அர்ச்சனை’ திட்டம் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்ததிட்டம் மற்ற கோவில்க ளுக்கும் விரிவுபடுத்தப்படும். தமிழில் அர்ச்சனை செய்வதற்கு போதிய அர்ச்சகர்கள் அனைத்து கோவிலிலும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். வதந்தி பரப்பினால் நடவடிக்கை ராணுவ ஹெலி காப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைதளங்களில் பொய் யான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வதந்திகளை பரப்புவோர் யார் என்பதை சைபர் கிரைம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர் என காவல்துறை எச்சரித்துள்ளது.