tamilnadu

img

பொதும்பு 75 - ஒரு கம்யூனிஸ்ட் கிராமத்தின் காவியம் - எஸ்.பாலா

விடுதலைக்கான போராட்டம் தீவிரமாக நடைபெற்று வந்த காலகட்டத்தில் துடிப்புமிக்க இயக்கத்தை முன்னெடுத்தது மதுரை யின் செங்கொடி இயக்கம். வைகை ஆற்றில் இருந்து சில மைல்கள் அருகில் அழகிய வயல்வெளிகள் இயற்கை சூழ இருக்கும் கிராமம்தான் பொதும்பு. அப்போது  கம்யூனிஸ்ட் இயக்கத் தின் கிளைகளை உருவாக்குவது என்று மதுரை ஜில்லா கமிட்டி முடிவு செய்கிறது. இந்தத் கிராமத்தில் இருந்து மில் தொழிலாளர்களாக நாகு, முத்து, வீரணன் ஆகியோர் மெஜூரா கோட்ஸ் மில்லில் (மதுரை கோட்ஸ்) பணியாற்றி வருகின்றனர். முதன் முதலில் விவசாய சங்கம் 1943-ஆம்  ஆண்டு பொதும்பு கிராமத்தில் செயல்பட ஆரம்பித்தது. கிராமத்தில் உள்ள பெரிய தனக்காரர்கள் உள்ளிட்ட அனைவரும் இயக்கத்தில் சேர்கின்றனர். 1946-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி கிளை உருவாக்கப்பட்டு செயலாளராக பி.எஸ்.வெங்கடசாமி தேர்வு செய்யப்பட்டார். இக்கிளையில் 12 பேர் உறுப்பினராக இருந்தனர். இக்காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாவட்ட செயலாளராக தோழர் என்.சங்கரய்யா செயல்பட்டு வந்தார். தோழர் என்.சங்கரய்யா அவர்கள் பொதும்பு கிராமத்திற்கு வரு வது என்றால் மிகப் பெரிய உற்சாகம் ஏற்படும். நடந்தே சென்று கட்சி கிளை  கூட்டத்தை நடத்திவிட்டு இரவு மாட்டு வண்டியில் மதுரைக்கு திரும்புவார்.

பொதும்பு பொன்னையா

1940 வாக்கில் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் உணவு இன்றி தவித்தனர். மதுரை மாவட்டம் பொதும்பு கிரா மத்தில் சமயன் என்பவர் பெரிய நிலச்சுவான்தார். ஆயிரம் மூடை நெல், சேமிப்பாக தன் வீட்டில் வைத்தி ருந்தார். தகவல் அறிந்து, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் வந்து நெல் மூடைகளை தந்து உத வுங்கள் என்று கேட்டனர். அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று அனுப்பி விட்டார். வெறுங்கையோடு அதிகாரி கள் திரும்பினர். எதிரில் வந்த கம்யூ னிஸ்ட் தோழர் பொன்னையா என்ன  விசயம் வந்தது என கேட்டார், நட ந்ததை கூறியுள்ளனர் அதிகாரிகள். உடனடியாக அவர்களை தோழர் பொன்னையா அந்த நிலச்சுவான்தா ருக்கு சொந்தமான குடோனுக்கு அழைத்துச் சென்று பூட்டை உடை த்து ஆயிரம் நெல் மூடைகளை எடுத்துக் கொள்ளும்படி கூறுகிறார். ஆனால் அதிகாரிகள் தயங்கினர். அதற்கு தோழர் பொன்னையா, ‘‘தயங்காதீர்கள். நான்தான் அந்த நிலச்சுவான்தாரின் ஒரே மகன்’’ என்று கூறவும் அதிகாரிகள் வண்டிகளில் நெல்லை ஏற்றிக் கொண்டு சென்ற னர். இந்த சம்பவத்தால் தந்தைக்கும் மகனுக்கும் மோதல் ஏற்பட்டது. பின்னர் சமாதானம் ஆகினர். மக்களுக்கு ஆயிரம் நெல் மூடைகளை கிடைக்கச் செய்ததால் பொதும்பு பொன்னையா, கலெக்டர் ஆபீஸ் போனால் அனைத்து அதிகாரி களும் எழுந்து நிற்கும் அளவிற்கு மரியாதை ஏற்பட்டது. 1948-இல் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்ட காலகட்டத்தில், வேட்டையாடப்பட்ட இயக்கமாக கம்யூனிஸ்ட் இயக்கம் இருந்தது. அந்தப் போராட்டக் களத்தில் அளப்பரிய தியாகம் செய்த கிராமமாக பொதும்பு திகழ்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலகட்டத்தில் பொதும்பு  கிராமத் தோழர்கள் பாப்பாத்தி, வீராயி உள்ளிட்ட 22 பேர் தலைமறைவாக வாழும் நிலை ஏற்படுகிறது. தோழர் பி.முத்துவை கைது செய்து பெல்லாரி சிறையில் அடைக்கிறது காவல்துறை. இந்த தலைமறைவு காலத்தில் ஒரு நாள் கட்சிப் பணியாக முக்கிய ஊழியரை சந்திக்க மேட்டுப்பட்டி பி.எஸ்.வெங்கடசாமியை சந்தித்து விட்டு திரும்பும் வழியில் உள்ள அரி யூர் ஓடை நடுவே உள்ள பாறையில் படுத்து உறங்கினார், தோழர் பொன்னையா. போலீசாரின் துப்பாக்கிக் குழல்கள், காடு மேடெல் லாம் பொன்னையாவின் உயிரைக்  குடிக்கத் தேடித் திரிந்த காலத்தில், அதற்கெல்லாம் தப்பி தலைமறை வாக இருந்து கட்சி வேலைகளைச் செய்து வந்த மாவீரனை, பாறையின் இடுக்கில் இருந்து வந்த நச்சரவம் தீண்டிவிட்டது. ஒளி மிகுந்த வீரத் திரு விழிகள் மூடி விட்டன. சில நாட்களில், தலைமறைவாக இருந்த மற்ற தோழர்களையும் சூழ்ச்சி செய்து கண்டுபிடித்து விட்டது போலீஸ். இரவு நேரத்தில் பொதும்பு கிராமத்திற்கு வடக்கே உள்ள பாறை களத்தில் (பொன்னையா இறந்த இடம்) கே.வீரணன், பி.கருப்பையா, பி.ராமையா, பி.சங்கு ஆகிய நான்கு  பேரையும் கைது செய்து விலங்கு மாட்டி சித்திரவதை செய்து லாரியில் ஏற்றிக் கொண்டுவந்து பொதும்பு மயானத்திற்கு அருகில் நிறுத்தி இறக்கினர். சுடுகாட்டில் கிடந்த சாம்பலை அள்ளி பூசி கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி சிறுநீர் கழித்து, பூட்சுகளை கழுத்திலும் வாயிலும் கவ்வச் செய்து அடித்தே ஊர் பொது சாவடிக்கு இழுத்து வந்துள்ளனர். ‘‘கம்யூனிஸ்ட் கட்சி ஒழிக, விவ சாயிகள் சங்கம் ஒழிக’’ என்று சொல்லச் சொன்ன போது மறுத்துள்ள னர். மூங்கில் தார் கொண்டைக் குச்சி யைக் கொண்டு அடித்து நொறுக்கி மதுரை சிறையில் அடைக்கப் பட்டு பல்வேறு வகையான சித்திர வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்நிலையில், மதுரையிலிருந்து போலீஸ் படை திரண்டு வந்து பொதும்பை முற்றுகையிட்டுள்ளது. தெருத் தெருவாக சென்று பாப்பாத்தி, வீராயி உள்பட 85 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்க ளில் பலர் மதுரை, திருச்சி பின்னர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வீரத் தியாகிகள் பாப்பாத்தி, வீராயி...

மதுரை சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாறி வந்த, தோழர்கள் செல்லம், சோணை, பிச்சை ஆகி யோர் ஏற்கெனவே இருந்தவர்களிடம் பொதும்பு வீரணனின் தங்கை தோழர் பாப்பாத்தியை விஷ ஊசி போட்டு கொன்று விட்டதாகவும், தோழர் வீராயி யை போலீஸ் தாக்கியதால் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார் என்றும் அதிர்ச்சித் தகவலை தெரிவித்தனர். சேலம் சிறையில் இருந்த தோழர்கள் 1951-ஆம் வருடம் விடுதலையாகி வந்தனர். கட்சி மீதான தடை நீங்கிய பின்னர் நடைபெற்ற ஊராட்சி மன்ற தேர்தலில் செல்லம் அவர்களும், ராமையா அவர்களும் ஊராட்சி தலைவர்களாக செயல்பட்டு உள்ளனர். 1952-ஆம் ஆண்டு நடை பெற்ற பொதுத் தேர்தலில் மேலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் இயக்க வேட்பாளர் வீர ணன் வெறும் 2000 வாக்குகள் வித்தி யாசத்தில் தோல்வி அடைந்தார். பொதும்பு, கே.பி.ஜானகி அம்மாள் துவங்கி எண்ணற்ற தலைவர்கள் சென்று வந்த போராட்ட பூமியாகும். அந்த வட்டாரத்தில் பாசிங்காபுரம், ரெங்கராஜபுரம், அரியூர், அம்ப லத்தாடி, பெருமாள்பட்டி என சுற்று வட்டாரத்தில் விவசாயிகள் சங்கமும், கம்யூனிஸ்ட் இயக்கமும் துடிப்பு மிக்கதாக இருந்தது.

எழுபத்தைந்து ஆண்டுகள்

அத்தகைய சிறப்பு மிக்க பொதும்பு கிராமத்தில் இன்றைக்கும் தோழர்கள் தொடர்ந்து பணியாற்றி தியாக வர லாற்றைத் தொடர்கின்றனர். பொதும்பு பொன்னையா தன்னுயிரை செங்கொடி இயக்கப் பயணத்தில் தியாகம் செய்து 75 ஆண்டுகள் ஆகி றது. அடக்கு முறை, வழக்கு, சிறை, தியாக வரலாறு என பொதும்பின் வர லாறு ஒரு கம்யூனிஸ்ட் கிராமத்தின் காவியமாகும்.  பொதும்பு பொன்னையா உள்ளிட்ட மகத்தான தியாகிகளைப் போற்றும்விதமாக பொதும்பு தியாகி கள் நினைவுப் பொதுக்கூட்டம் செப்டம்பர் 25 அன்று நடைபெற உள்ளது.