திமுக அரசு பொறுப்பேற்றதும் 5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன், திங்களன்று(டிச.13) சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, நிதித்துறை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.