tamilnadu

பாடநூல் அச்சடிக்கும் பணிகளை தமிழக நிறுவனங்களுக்கே தரக்கோரிக்கை

சென்னை, டிச. 17 தமிழ்நாடு அரசு      பாடநூல்களை    அச்சடிக்கும்     தமிழ்நாட்டு குறு, சிறு மற்றும்    நடுத்தர    தொழில் நிறுவ னங்களையும், அதனைச் சார்ந்த பல்வேறு நிறுவனங் களையும் தொழிலாளர்க ளையும் காப்பாற்றும்படி பாடநூல் தயாரிப்பு பணி யில் ஈடுபட்டுள்ள பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து புத்தகம் அச்சிடுவோர் மற்றும் பைன்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் மோசஸ்,பாடநூல் அச்சிடுவோர் நலச்சங்கத் தலைவர் உதயகுமார், புத்த கம் அச்சிடுவோர் மற்றும் பைன்டர்ஸ் அசோசியேஷன் செயலாளர் பிரேம்குமார், பாடநூல் அச்சிடுவோர் நலச் சங்க செயலாளர் குமரே சன், புத்தகம் அச்சிடுவோர் மற்றும் பைன்டர்ஸ் அசோ சியேஷன் உறுப்பினர் விநாய கம் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

தமிழ்நாடு பாடநூல்    நிறுவனத்தின் வேலை    வாய்ப்பினையே சார்ந்து    இருக்கும்  சிறுகுறு அச்சகத் தாருக்கு  உரிய  வேலை  வாய்ப்பு  இல்லாமல்,  வங்கி களுக்கு  செலுத்த  வேண்டிய மாதாந்திர தவணைகளை (இஎம்ஐ)  கட்ட முடியாமல் கடன்   சுமையால்  பல்வேறு இன்ன ல்களை அனுபவித்து வருகிறோம். தற்போது  தமிழகத்தை சார்ந்த 48 வெப் ஆப்செட் அச்சகங்கள், 51 ஆப்செட் அச்சகங்கள் உள்ளிட்ட  99   அச்சகத்தாரின் அச்சடிக் கும்   திறன்   4   மடங்காக   உயர்ந்துள்ள நிலையில்   தமிழக பாடநூல் நிறுவ னத்தின் பாட  நூல்களை  அச்சடிக்கும்  பணிகளை  தமிழகத்தை சார்ந்த எம்எஸ்எம்இ அச்சகத்தாரே  உரிய நேரத்தில் செய்து தர முடியும். அண்டை   மாநில அச்சகத் தாருக்கு  தமிழ்நாடு  பாட நூல்களை  அச்சடிக்க வாய்ப்பு  கொடுப்பதினால்  தமிழ்நாட்டை சேர்ந்த சிறுகுறு அச்சகத்தார் வேலை வாய்ப்பினை இழந்து, வங்கிகளில் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

 சில அச்சகங்கள் மூடப்பட்டு விட்டன. பலர்  அச்சகங்களை மூடும் நிலையில் உள்ளனர். இந்த அச்சகங்களில்  உள்ள  இயந்திரங்களில்  தமிழ்நாடு  பாடநூல்களை  தவிர்த்து  வேறு  எந்த  வேலையையும் செய்ய இயலாது.  தமிழக  அச்சகத்தார்  பிற   மாநிலங்களின்  அரசு  பாட நூல்களை  அச்சடிக்கும்  பணி களை செய்ய  முடியாத  சூழ் நிலையில்  மற்ற  மாநில   அச்சகத்தாருக்கு  நம்  மாநில  பாடநூல்  பணிகளை தாரை வார்த்து கொடுப் பதினால்   தமிழ்நாடு   பாட நூல்  நிறுவனத்தின்   பாட நூல் அச்சடிக்கும்   பணி யினை நம்பி இருக்கும்,   அச்சகத்தார்கள்   பெரிதும்   பாதிக்கப்பட்டுள்ளனர்.   மற்ற   மாநில அச்சகத்தாருக்கு   அச்சடிக்க கொடுக்கும்   பணியினை   பிற   மாநிலங்க ளில் எப்படி தடை   செய்யப் பட்டுள்ளதோ அதைப்   போலவே நம்முடைய தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் அனைத்து பாடநூல் பணிகளை தமிழகத்தை சார்ந்த எம்எஸ்எம்இ அச்சகத் தாருக்கே  தந்து  இந்த   மாநில  குறு,  சிறு  மற்றும் நடுத்தர  தொழில்  நிறுவனங் களை காப்பாற்றும்படி மிகுந்த தாழ்மையுடன்  தமிழ கத்தைச் சேர்ந்த  அனைத்து  எம்எஸ்எம்இ  அச்சகத்தார்க ளும்  கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

;