சென்னை,டிச.16- சட்டப்பேரவையின் அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தை பொங்கலுக்கு பிறகு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சட்டப்பேரவை விதிகளின்படி ஒரு கூட்டத்தொடர் முடிவடைந்த 6 மாதத்துக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், மே மாதம் பேரவையின் கூட்டத் தொடர் முடிவுற்ற நிலை யில், மழைக்கால கூட்டம் அக்டோபர் 17 அன்று தொடங்கி யது. ஆனாலும் 3 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய விளையாட்டுகளுக்கு தடை, `ஹூக்கா பாருக்கு தடை உள்ளிட்ட 12 மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டன. அத்துடன், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் பட்டது. இந்நிலையில், கடந்த அக்.17 இல் கூடிய இந்த ஆண்டின் கடைசி கூட்டத் தொடரை முடித்துவைப் பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். தமிழக அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சட்டப் பேரவையின் முதல் கூட்டம் வழக்க மாக ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படும். ஆளுநர் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கும். முன்னதாக, கூட்டம் நடத்துவ தற்கான தேதிகளை முடிவு செய்து, ஆளுநரின் ஒப்புதல் பெறப்படும். அதன்படி கூட்டம் நடைபெறும். அடுத்த ஆண்டில் (2023), சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தை பொங்கல் பண்டிகைக்கு பிறகு நடத்தலாமா என ஆலோ சனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.