tamilnadu

img

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி அக்.18-20 இல் கறவை மாடுகளுடன் மறியல்

ஈரோடு, அக்.14- பால் கொள்முதல் விலையை உயர்த்தக்  கோரி அக்டோபர் 18-20 தேதிகளில் கறவை மாடுகளுடன் மறியலில் ஈடுபடுவது என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நாமக்கல்லில் மாநிலத் தலைவர் கே. முகமது அலி தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் பி.பெருமாள், பொரு ளாளர் ஏ.எம்.முனுசாமி உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.   இக்கூட்டத்தில், கடந்த 2019 ஆம் ஆண்டிற்குப் பின் தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. இக்காலத்தில் தவுடு, பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கலப்பு தீவனம் உள்பட அனைத்து பொருட் களின் விலையும் கடுமையாக உயர்ந்துள் ளது. சமீபத்தில் தனியார் நிறுவனங்கள் பாலுக்கு கொள்முதல் விலையை ஒரு லிட்ட ருக்கு ரூ.5 வரை உயர்த்தியுள்ளது. இதனால் ஆவினுக்கு வரும் பாலும் குறைந்துள்ளது. இது மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதே காலத்தில் ஆவின் நிறுவனம் பால்  உற்பத்தி பொருட்கள், இனிப்புகள் ஆகிய வற்றின் விலையை இருமுறை உயர்த்தி யுள்ளது. ஆனால் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. எனவே, மேலும் காலதாமதம் செய்யாமல் பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி பசும்பாலுக்கு ரூ.42ம், எருமைப்பாலுக்கு ரூ.51ம் உயர்த்தி அறிவித்திட வேண்டும். பால்  உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையும், ஊக்கத் தொகை, போனஸ் உள்பட தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டும். குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் பால், பால் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 18, 19, 20 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கறவை மாடுகளுடன் மறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.