tamilnadu

img

அமைதிப் பூங்காவாக திகழ்கிறது தமிழ்நாடு

சென்னை, ஜூலை 11- தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்வதற்கு சட்டம் – ஒழுங்கு சிறப்பாக இருப்பதே காரணம் என  முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார். காவல்துறை அதிகாரி களுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாயன்று (ஜூலை 11) நடைபெற்றது. இதில்  முதலமைச்சர் பேசுகை யில்,“சட்டம்-ஒழுங்கு விவகாரத்துக்கு அரசு அதிக  முக்கியத்துவம் கொடுக்கி றது. கடந்த 6 மாத காலத்தில்  காவல்துறை செயல் பாடுகள் திருப்திகரமாக உள்ளது. அடுத்த ஓராண் டிற்கு மக்களை பாதிக்கும் எந்த ஒரு சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண் டும்” என்றார்.

காவல் மரணங்கள்....

காவல் மரணங்கள் முழு மையாக தடுக்கப்பட வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தி யுள்ளார். பெண்கள் பாதுகாப்பு பொது இடங்களில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய் வது காவல்துறை கடமை என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கள்ளச்சாராயம் காய்ச்சு தல், விற்பனை செய்தல் வெகுவாக குறைந்துள்ளது. மக்களிடம் பெறப்படக் கூடிய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது  நடுநிலைமை தவறக்கூடாது.  புகார்கள் மீது தகவல் அறிக்கை பதியப்பட்டு விருப்பு, வெறுப்பின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையங்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் அங்கே பேச்சு வார்த்தை நடத்துவது தவிர்க்க வேண்டும் என்றும்  முதலமைச்சர் குறிப் பிட்டார்.

போதைப் பொருள் விற்பனை

போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவுறுத்தியுள்ளார். சமூக வலைதளங்கள் மூலம் சாதி, மத மோதல்களை தூண்டுபவர்கள் அதிகமாக வருகிறார்கள் என்றும் கூறினார்.

வன்மங்களை பரப்புவோர்

சமூக வலைதளங்களில் வன்மங்களை பரப்புப வர்களை கண்டறிந்து கடு மையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றமே நடைபெறவில்லை என்ற புள்ளி விவரம் வருவதையே எதிர்பார்க்கிறேன் என்று  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.
 

;