tamilnadu

img

உழவர்கள் நடத்திய சுதந்திரப் போராட்டம்

விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவை யொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: வேளாண் திருத்தச்சட்டங்களை இரத்து செய்ய வைத்துள்ள உழவர் களின் மாபெரும் எழுச்சிப்போராட்டத் தின் ஓராண்டு நிறைவையொட்டி தீக்கதிர் நாளிதழ் சிறப்பிதழ்கொண்டு வந்திருப்பதற்கு எனது வாழ்த்து களையும், பாராட்டுகளையும் தெரி வித்துக் கொள்கிறேன். ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த உழவர் விரோத மூன்று வேளாண் சட்டங்க ளையும் எதிர்த்து ஒரு முனையில் களப் போராட்டம் நடக்க, இன்னொருமுனையில் கருத்துப் போராட்டம் மூலம் தீக்கதிர் நாளிதழ் வெளியிட்ட கட்டுரை களும் மிக முக்கியமானவை. அறவழிப் போராட்டங்கள் மூலம் எத்தகைய அராஜகத்தையும், அடக்குமுறையையும் முறியடித்து வெற்றி வாகை சூட முடியும் என்பதற்கு ஓராண்டு காலம்  நடைபெற்ற உழவர்கள் போராட்டம் நம் ஜன நாயகத்தின் சிறப்புமிகு அடையாளமாக - உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் போற்றிப் பாராட்டக்கூடிய மகத்தான சாதனையாக அமைந்திருக்கிறது.

தலைநகர் தில்லியில் நடைபெற்ற வீரம் செறிந்த போராட்டத்திற்குத் திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிக்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும், இயக்கங்களும் ஆதர வளித்து உழவர்களின் கோரிக்கைகளை மக்கள் மன்றத்திற்குதொடர்ந்து கொண்டுசென்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது குறித்து அனல் பறக்கும் வாதங்களை முன்வைத்தோம்.  அந்தச் சட்ட முன்வடிவுகளுக்கு எதிராக வாக்களித் தோம். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் உள்ள கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாநிலைப் போராட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி - உழவர்களின் போராட்டத்திற்கு துணை நின்றோம். திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்ற வுடன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றினோம். இவை அனைத்தையும் விட - தங்கள் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட அனைத்து அடக்குமுறைகளையும் துணிச்சலுடன் நின்று ஓராண்டு காலம் இரவு பகலாக, பனியிலும், கடும் குளிரிலும் போராடிய உழவர் களின் அர்ப்பணிப்பும் - வீரம் கலந்த தியாக உணர்வும் இன்று ஒன்றிய பா.ஜ.க. அரசை ஏர் உழும் விவ சாயிகள் முன்பு அடிபணிய வைத்திருக் கிறது. இது இந்திய ஜனநாயகத்தில் அறநெறிப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் உழவர்களைப் பகைத்துக்கொண்டு ஒரு ஆட்சி, நாட்டில் நீண்ட நாள் அமைதி காக்க முடியாது என்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு உணர்த்தி இந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைத்துள்ளது வரலாற்று நிகழ்வு. இதை உழ வர்கள் நடத்திய சுதந்திரப் போராட்டம் என்றே அடையாளப்படுத்தலாம். அந்த அளவிற்கு அறவழி யில் வீறு கொண்டு நடந்த போராட்டம் இது. எதேச்சதிகாரத்தின் மூலம் எதையும் சாதித்துவிட முடியாது என்பதை ஒன்றிய பா.ஜ.க.  அரசுக்கு உணர்த்திய வேளாண் பெருங்குடி மக்களுக்கு நாம் என்றைக்கும் நன்றிக் காணிக்கை செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். அந்தக் கடமையில் ஒன்றாக - தீக்கதிர் வெளியிட்டுள்ள இந்தச் சிறப்பிதழ்  உழவர்களின் உறுதிமிக்க போராட்ட வரலாற்றைச்  சொல்லும். அறவழிப் போராட்டம் ஜனநாயகத்தின் முக்கிய அங்கம் - அதை யாரும் முனை மழுங்க  வைக்கவோ, புறந்தள்ளி விடவோ முடியாது என்ற செய்தியை உலகெங்கும் கொண்டுசேர்க்கும். ஆகவே இதுஉழவர்கள் போராட்டத்தின் ஓராண்டு நிறைவுச்சிறப்பிதழ் என்பதை  விட - தீக்கதிர் வெளியிடுவது மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற்றதற்கான வெற்றி விழாச் சிறப்பிதழ் என்றே கொள்ளவேண்டும். இத்தகைய சாதனைச் சிறப்பிதழை வெளியிட்டுள்ள தீக்கதிர் நாளிதழுக்கு மீண்டும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.