tamilnadu

img

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவ.18 மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், செப்.19- தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சுப் பணியாளர் சங்க 10 ஆவது மாநில மாநாடு  சனிக்கிழமை கொடியேற்றத்துடன் பிரதிநிதிகள் மாநாடு தொடங்கி நடைபெற்றது.  தஞ்சை காவேரி நகர் சுந்தர் மகாலில் நடை பெற்ற மாநில மாநாட்டிற்கு மாநிலத் தலைவர்  இரா.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.  வரவேற்புக் குழு தலைவர் சா.கோதண்டபாணி வரவேற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் -கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் துவக்கவுரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் கி.முத்துக் குமார், செயலாளர் அறிக்கையும், மாநில பொரு ளாளர் இ.ரேணுகாதேவி பொருளாளர் அறிக்  கையும், மாநில துணைத்தலைவர் உ.சுமதி அமைச்சுப் பணி இதழ் அறிக்கையும் முன்  வைத்தனர். மாநில துணைத் தலைவர் பா. வேங்கடவரதன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் ஆ.ரெங்கசாமி, தமிழ்நாடு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கம் மாநிலத் தலைவர் எம். சௌந்தரராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மாநில துணைத் தலைவர்கள் பா.வேங்கட வரதன், சி.வெங்கடேசன், மாநிலச் செயலா ளர்கள் சு.சுதாகர், ஆ.ஜா.பார்த்திபன், கா.முரு கானந்தம், க.திவ்யா ஆகியோர் பேசினர். இம்மாநாட்டில் மாநிலத் தலைவராக உ. சுமதி, மாநில பொதுச் செயலாளராக கி.முத்துக்  குமார், மாநிலப் பொருளாளராக இ.ரேணுகா தேவி, மாநில துணைத் தலைவர்களாக பா. வேங்கடவரதன், ஆ.ஜா.பார்த்திபன், க.திவ்யா, முருகானந்தம், சுதாகர், வெங்கடேஷ், மாநி லச் செயலாளர்களாக பாலமுருகன், சங்கர், ஜெயவேல், ரமேஷ், பாபு, கல்பனா, மாநில தணிக்கையாளர்களாக பாலாஜி, ரமேஷ் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, மாலை பொது மாநாடு புதிய தலைவர் உ.சுமதி தலைமையில் நடை பெற்றது. தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் கோ.  சிவலிங்கம் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாநிலச் செயலாளர் ச.ஹேமலதா வாழ்த்திப் பேசினார். அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர்  உ.வாசுகி கருத்துரை யாற்றினார். தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம் நிறைவுரையாற்றினார். வரவேற்பு  குழு செயலாளர் ஜெ.பலராமன் நன்றி கூறினார்.  புதிதாக ஆரம்பிக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் உருவாக்கப்பட்ட நிலையில், இந்த அலுவல கங்களுக்கு ஆட்சி அலுவலர் பணியிடம் விடு பட்டுள்ளது. மாவட்டம் முழுமைக்கான நிர்வாகப் பணி மற்றும் நிதியை முறையாக கையாள்வ தற்கு ஆட்சி அலுவலர் பணியிடம் அவசியமா கும். எனவே, இந்த மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகங்களுக்கு தலா ஒரு ஆட்சி அலுவலர் பணியிடம் அனுமதிக்க வேண்டும்.  

தோட்டக்கலைத் துறை மாவட்ட துணை இயக்குநர் அலுவலகங்களில் இதுவரை 17 மாவட்டங்களுக்கு மட்டுமே ஆட்சி அலுவலர் பணியிடம் அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுமைக்கும் நிர்வாகப் பணியை கவனிக்க வும், அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை  முறையாக கையாள்வதற்கும், ஆட்சி அலுவலர்  பணியிடம் அவசியம் என்பதால், இதர அனைத்து மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்கு நர் அலுவலகங்களுக்கும், தலா ஒரு ஆட்சி அலுவலர் பணியிடம் அனுமதிக்க வேண்டும்.  வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு கண்  காணிப்பாளர், ஒரு உதவியாளர், ஒரு இள நிலை உதவியாளர், ஒரு தட்டச்சர் பணியிடம் அனுமதிக்க வேண்டும்.  இக்கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர் மற்றும் நிதி அமைச்சருக்கு அக்டோபர் 18 அன்று மின்னஞ்  சல் அனுப்புவது, நவம்பர் 18 அன்று அனைத்து  மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்து வது, நவம்பர் 19 முதல் 2023 ஜனவரி 23 வரை  ஊழியர் சந்திப்பு இயக்கம் நடத்துவது, 2023 ஜனவரி 24 அன்று நிலுவை கோரிக்கை குறித்து  தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகை யில், அவரது சொந்த தொகுதியான கொளத்தூ ரில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னணி  தோழர்கள், ஒருநாள் அடையாள உண்ணாவிர தம் இருப்பது என தீர்மானிக்கப்பட்டது.

;