tamilnadu

img

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு மாணவச் செல்வங்கள் உற்சாகம்!

“இக்கல்வியாண்டு இனிதே அமையட்டும்” : முதல்வர் வாழ்த்து

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பையொட்டி, மாணவச் செல்வங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், “கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி ஆண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்! பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை - உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

சென்னை, ஜூன் 10 - தமிழகத்தில் கோடை விடுமுறை  முடிந்து, திங்களன்று (ஜூன் 10) பள்ளிகள் திறக்கப்பட்டன. 1 மாதத் திற்கும் மேலாக விடுமுறையில் இருந்த மாணவச் செல்வங்கள், மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்து டனும் பள்ளிகளுக்குச் சென்றனர். அவர்களுக்கு சாக்லேட் உள்ளிட்ட இனிப்புக்களை கொடுத்தும், மலர்களைத் தூவியும் ஆசிரியர்கள் வரவேற்பு கொடுத்தனர். தமிழகத்தில் வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 அன்று வெளியா கும் என்று கூறப்பட்டு இருந்ததால், ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப் படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது.  இதனிடையே கடும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை காரண மாக பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கைகளை அடுத்து, பள்ளிகள் திறப்பு ஜூன் 10-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தான், அறிவிக்கப் பட்டபடி திங்களன்று (ஜூன் 10) பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆசிரியர்கள் வரவேற்பு; குழந்தைகள் உற்சாகம்! புதிய கல்வியாண்டில் அடி யெடுத்து வைக்கும் உற்சாகத்துடன் மாணவ - மாணவிகள் வகுப்புக்குள் நுழைந்தனர். அனைத்துப் பள்ளிகளி லும் புதிய மாணவர்களை வரவேற் கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தன. கோடை விடுமுறை க்கு பின்னர் வந்த மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி யும், மலர்களையும் தூவியும் வர வேற்பு அளித்தனர். பள்ளி வாச லைத் தொட்டதுமே பரவசமான மாணவ - மாணவியர், தங்களது நண்பர்களை பார்த்து ஆனந்த மடைந்தனர். ஆசிரியர்களைப் பார்த்தும் நலம் விசாரித்தனர்.

முதல் நாளிலேயே  பாடநூல்கள் வழங்கல்!

கல்வி ஆண்டை உற்சாகமாக தொடங்க உதவும் வகையில், தமிழக அரசு ஏற்கெனவே அறி வித்திருந்த படி, கல்வியாண்டின் முதல் நாளிலேயே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியர்க்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுகள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. சென்னை ஆலந்தூர் ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.  அன்பரசன் ஆகியோர் பாடப்புத்த கம் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கினர். பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஜெ. குமரகுருபரன், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் க. அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச. கண்ணப்பன், தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சீருடைகள், கல்வி உபகரணங்களும் வழங்கல் இதேபோல மாநிலம் முழு வதும் 70 லட்சத்து 67 ஆயிரம் மாண வர்களுக்கு பாடப் புத்தகங்களும், 60 லட்சத்து 75 ஆயிரம் மாண வர்களுக்கு நோட்டுகளும், 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவர்களுக்கு புவி யியல் வரைபடங்களும் வழங்கும் பணிகள் துவங்கின. அத்துடன் தமிழக அரசின் சார்பில் புத்தகப் பை,  காலணி, மழைக்கோட்டு, சீருடைகள், வண்ணப் பென்சில் மற்றும் கிரையான்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ் உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டன. பேருந்துப் பயண அட்டை புதிய இலவச பேருந்துப் பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கெனவே உள்ள பழைய அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் கட்டணமின்றி அரசு பேருந்துகளில் சீருடையுடன் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
 

;