நடப்பு நிதிநிலை அறிக்கையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் உள்ளிட்ட கிராமப்புற ஏழைகளின் நலன்களையும்-தமிழ்நாட்டையும் முழுமையாக புறக்கணித்த ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் எழுச்சியாக நடைபெற்றன. இதனொரு பகுதியாக தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.