tamilnadu

img

10, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி

10, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி

புதுக்கோட்டை, மே 19-  10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவிகிதத் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.  புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்வெழுதிய 71 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் மா.பா. நெகாசினி, ச.ரா. நிகிதாஸ்ரீ, சி.கனிகா, அ.அ. அட்சயா, ரா.கனிகா ஆகியோர் அதிக மதிப்பெண்களை எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளனர். 6 மாணவர்கள் அறிவியல் பாடத்திலும், 4 மாணவர்கள் சமூக  அறிவியல் பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எடுத்துள்ளனர். மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) பொதுத்தேர்வில் இப்பள்ளியில் இருந்து தேர்வெழுதிய 96 பேரும் தேர்ச்சி பெற்றதால், இப்பள்ளி நூறு சதவிகிதத் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் ஆர். யாழினி, எம்.கவின் கிஷோர், கே.ராகவி, எம்.ரித்திகா ஆகியோர் அதிக மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை, பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, ஆலோசகர் அஞ்சலி தேவி தங்கம் மூர்த்தி, மேலாண்மை இயக்குநர் நிவேதிதா மூர்த்தி, இயக்குநர் ஆர்.சுதர்சன், ஆலோசகர் நாகா அதியன், முதன்மைச் செயல் அலுவலர் காவியா மூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.