tamilnadu

img

பழங்குடி மக்களின் எதிரி மோடி அரசு!

நாமக்கல், செப். 20 - நாமக்கல் மாவட்டத்தில், ஆதிவாசிகள் உரிமைகளுக்கான 4 ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாள் பிரதிநிதிகள் மாநாட்டில், சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் பங்கேற்று வாழ்த்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,  “மோடி தலைமையிலான பாஜக அரசு, தொழிலாளர் வர்க்கத்திற்கும், மக்க ளுக்கும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு பேரழிவு என்பதை அதன் நடவடிக்கைகள் தெளிவாக உணர்த்திவிட்டன. நமது முன்னோர்களின் முற்போக்கான ஜன நாயக மற்றும் மதச்சார்பற்ற பார்வையை மோடி அரசு அழித்து வருகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் நலனுக்காக நமது மக்களின் நலனை அடகு வைக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வெறுப்பு மற்றும் பிரி வினை அரசியல் நாட்டில் மேலும் அதிகரித்துள்ளது.  உண்மையில், மதவாத சக்திகள் இன அடையாள அரசின் மூலம் மக்களி டையே பிளவை ஏற்படுத்துகிறார்கள். மலைப்பகுதியில் உள்ள நிலங்கள், ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினரின் சொத்துக்களாகவும் அவர்கள் வாழ்வாதார மாகவும் உள்ளது.  பாஜக அரசால் தூண்டி விடப்பட்ட மணிப்பூர் இனக் கலவரம் அருகில் உள்ள மிசோரம் மற்றும் மேகா லயாவிற்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள் ளது. கல்வியும் சுகாதாரமும் மிகப்பெரிய அளவில் வணிகமயமாக்கப்பட்டுள்ளது. இலவசக் கல்வி, சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கூட போராடிப் பெற வேண்டிய கட்டத்தில் நாம்  உள்ளோம். வனத்திருத்த சட்டம், சுரங்க  திருத்த சட்டம் ஆதிவாசிகளின் வாழ்வுக்கும் வாழ்வாதாரத்திற்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மோடி அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த, நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் எந்த விவாதமும் இல்லா மல் மசோதாக்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றியது. 

கடலோரம் மற்றும் கரையோரங்களில் பல அரிய மற்றும் முக்கியமான கனிமங் களை தனியார் சுரங்கத்துக்கு அனு மதிக்கும் மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மோடி அரசாங்கம் 2023 ஆம் ஆண்டில் அவர்களின் கார்ப்ப ரேட் எஜமானர்களுக்கு 2.14  லட்சம் கோடி ரூபாய் வங்கி கடன்களை புதிதாக தள்ளு படி செய்வதாக அறிவித்துள்ளது. குடிமக்க ளின் அடிப்படைத் தேவைகளை நிறை வேற்றும் சேவை பொறுப்பிலிருந்து விலகிச் செல்கிறது. மாறாக இந்த சேவை களை தனியார் நிறுவனத்திற்கு எளிதாக்கு கிறது. மின்சாரம் மற்றும் ரயில்வே தனியார் மயம் ஆக்குவதை இந்த பின்னணியில் நாம் புரிந்து கொள்ளலாம்.  வகுப்புவாத பாஜக அரசு வெறுப்பு அர சியலைப் பரப்பி மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிரித்து அரசியல் ஆதா யம் பெற்று வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நிதர்சனம். ஒரே தேசம், ஒரே மதம் என்று இருக்க முடியாது. மத்தி யில் ஆளும் மோடி அரசை அகற்றுவதில் சிஐடியு தொழிற்சங்கம் தன்னுடைய முழு மையான பங்களிப்பை செலுத்தும். உழை க்கும் மக்களுடன் சேர்ந்து கார்ப்பரேட் வகுப்பு வாத சக்திகளை நாம் அகற்று வது காலத்தின் கட்டாயம். நாம் போராடுவோம் நாம் வெற்றி பெறுவோம்! இவ்வாறு அவர் பேசினார்.