tamilnadu

டிச.15 முதல் பொள்ளாச்சி - திருச்செந்தூர்; செங்கோட்டை - கொல்லம் சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை, டிச.11- பொள்ளாச்சி - திருச்செந்தூர், மதுரை வழியாக மற்றும் செங்கோட்டை - கொல்லம் ரயில் நிலையங்களுக்கு இடையே டிசம்பர் 15 முதல் விரைவு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி திருச்செந்தூர் - பொள்ளாச்சி விரைவு ரயில் டிசம்பர் 15 முதல் திருச்செந்தூரிலிருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு இரவு 08.40 மணிக்கு பொள்ளாச்சி சென்று சேரும் என்றும் மறுமார்க்கத்தில் பொள்ளாச்சி - திருச்செந்தூர் விரைவு ரயில் டிசம்பர் 16 முதல் பொள்ளாச்சியில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு மாலை 3.45 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் கோமங்கலம், உடு மலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்தி ரம், திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந் தான், மதுரை, திருப்பரங்குன்றம், திரு மங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில் பட்டி, வாஞ்சி, மணியாச்சி, தாழை யூத்து, திருநெல்வேலி, பாளையங் கோட்டை, ஆழ்வார் திருநகரி, நாச ரேத், கச்சினா விளை, குரும்பூர், ஆறு முகநேரி, காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் இந்த ரயில்களில் 8 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி மற் றும் காப்பாளர் பெட்டிகள் இணைக்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம் எனவும், இந்த ரயில்கள் பாலக்காடு - பொள்ளாச்சி மற் றும் பொள்ளாச்சி - பாலக்காடு முன்பதி வில்லா சிறப்பு ரயில்களின் இணைப்பு ரயில்களாக செயல்படும்.

மேலும் செங்கோட்டை - கொல் லம் முன்பதிவற்ற விரைவு சிறப்பு ரயில் டிசம்பர் 15 முதல் செங்கோட்டை யில் இருந்து முற்பகல் 11.35 மணிக்கு புறப்பட்டு மாலை 03.35 மணிக்கு கொல் லம் சென்று சேரும். மறுமார்க்கத்தில் கொல்லம் - செங்கோட்டை முன்பதி வற்ற விரைவு சிறப்பு ரயில் டிசம்பர் 16 முதல் கொல்லத்தில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.20 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் பகவதிபுரம், நியூ ஆர்யங் காவு, தென்மலை, எடமன், புனலூர், அவ னீஸ்வரம், கொட்டாரக்கரா, எழுகோன், குன்டரா, கிளிகொல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று மதுரைக்கோட்ட தெற்கு ரயில்வே தக வல் தெரிவித்துள்ளது.

;