தென்காசி, செப். 8 தென்காசி மாவட்டம் இந்திய மாணவர் சங்கம் சார்பாக ஆலங் குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ளி ருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அருண் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் வருன் பாரத். கிளை நிர்வாகிகள் திவ்யா, காவியா ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதிய வகுப்பறைகள் இல்லாத தால் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவிகளை 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருநெல்வேலி இராணி அண்ணா கலை கல்லூ ரிக்கு சென்று வர கூறியதைக் கண்டித்து மாணவிகள் ஆலங்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ளிருப்பு போராட் டம் நடத்தினர். ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 3 ஆண்டுகளாக வாடகைக் கட்டி டத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த மே 13-இல் கல்லூரிக்கு சொந்தக் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனிடையே தற்போது 3ஆவது கல்வி ஆண்டாக மாணவி கள் சேர்க்கை நடைபெற்ற நிலை யில் மாணவிகளின் எண்ணிக்கை 800 க்கும் அதிகமாகி யுள்ளது. மாண விகள் அனைவருக்கும் தற்போது செயல்பட்டு வரும் வாடகைக் கட்டிடம் போதுமானதாக இல்லை என்பதால் மாற்று ஏற்பாடாக சுமார் 250 மாணவிகள் ஆலங்குளத்திலும் மற்ற மாணவிகள் கல்வி பயில திருநெல்வேலி ராணி அண்ணா மகளிர் கல்லூரியின் புதிய கட்டி டத்திலும் திங்கள்கிழமை முதல் ஏற்பாடு செய்யப்பட்டது. கூடுதல் தொலைவு பயணம் செய்வதால் போக்குவரத்து செலவு அதிகரிக்கும், வீடு திரும்ப வெகு நேரம் ஆகும் என்பதால் திரு நெல்வேலி கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்ற அறிவிப்பைக் கண்டித்தும் ஆலங்குளத்திலேயே கல்லூரி தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆலங்குளம் கலை கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர் . கல்லூரி முதல்வர் மற்றும் பேரா சிரியர்களுடன் நடந்த பேச்சுவார்த் தையில் ஒரு வார காலத்திற்குள் மாற்று ஏற்பாடு செய்து ஆலங்குளத் திலேயே கல்லூரி தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதுவரை கல்லூரி விடு முறை எனவும் கூறியதின் அடிப்படையில், காத்திருப்பு போராட்டமானது முடிவு பெற்றது.