tamilnadu

img

அறிவியல் கதிர் - இரா.இரமணன்

1 வருமுன் காப்போம் 

கலிபோர்னியா, ஆஸ்திரேலியா, சைபீரியா ஆகிய பகுதிகளில் சேதங்களை ஏற்படுத்தும் காட்டுத் தீ, 2050ஆண்டுக்குள்  30%அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என ஐநா வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இதுவரை பாதிக்காத நாடுகளில்கூட, அதிகரிக்கும் பருவநிலை நெருக்கடி, நிலப்பயன்பாடு மாற்றம் ஆகியவைகளால் எதிர்காலத்தில் தீவிரமான காட்டுத் தீ ஏற்படலாம். காட்டுத்தீ ஏற்பட்டபின் எடுக்கும் அவசர நிலைமை செயல்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் காட்டுத் தீ தடுப்பு  நடவடிக்கைகளையும் நாடுகள் எடுக்க வேண்டும் என அவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். 

ஆக்டோபஸ் வளர்ப்பு!

ஸ்பெயின் நாட்டு நிறுவனம் ஒன்று கிரான் கனேரியா தீவுகளில் முதன்முதல் ஆக்டோபஸ் பண்ணையை ஏற்படுத்த உள்ளது. 2023இல் நடைமுறைக்கு வர உள்ள இது வணிக ரீதியானது. புலணுர்வு கொண்ட இத்தகைய விலங்குகளை வணிக ரீதியாக வளர்ப்பது அறநெறி ரீதியாகவும் தவறானது; மேலும் சுற்று சூழல் அழிவுக்கும் இட்டு செல்லும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதற்கு முன் எடுக்கப்பட்ட இத்தகைய முயற்சிகளில் அதிக அளவு இறப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த நிறுவனம் இவற்றை வளர்ப்பதில் உகந்த சூழ்நிலைகளை ஏற்படுத்தியிருப்பதாக உறுதி அளிக்கிறது. 

3  விட்டமின் சத்துள்ள புதிய தாவரங்கள்  

விட்டமின் பி குறைபாட்டை போக்கும் திறன் உள்ள 1044 தாவர வகை  களை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளார்கள். சத்துணவு தன்மை கொண்ட 300 வகை தாவரங்களின் விட்டமின் பி சத்துத் தரவுகளை  திரட்டியதில் தூரத்து உறவுமுறை தாவரங்களை விட நெருக்கமான தொடர்புடைய வகைத் தாவரங்கள் ஒரே மாதிரியான சத்துணவுத் தன்மையை வெளிக்காட்டுகின்றன என்று தெரியவந்துள்ளது. இந்த  தாவரங்கள் பி1,பி2, பி3,பி5,பி9 ஆகிய சத்துகளின் ஆதாரமாக விளங்கக்கூடியவை என்பதும் காணப்பட்டுள்ளது. 

4 ஜேம்ஸ் வெப்  தொலைநோக்கி எடுக்கப் போகும் முதல் படம் 

அமெரிக்காவிலிருந்து ஏவப்பட்ட ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி ஒரு மாத கால பயணத்தில் தன உறுப்புகளை தானே விரித்துக் கொண்டும் இணைத்துக்கொண்டும் ஜனவரி 24ஆம் தேதி அதன் இலக்கான எல்2 என்கிற இடத்தை அடைந்துள்ளது. இந்த இடமானது பூமி-சூரியன் இரண்டாவது லாக்ரான்ஜ் எனப்படுகிறது. செவ்வாய் கிரகத்தை நோக்கிய திசையில் பூமியிலிருந்து 1.5மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.இந்த இடத்தில் சூரியன் மற்றும் பூமியின் புவி ஈர்ப்பு விசை டெலஸ்கோப்பை உள்நோக்கி இழுக்கும் சென்ட்டிரிபீட்டல் விசையை சமன் செய்வதால் அது தடங்கலின்றி தன் பாதையில் சுற்ற முடியும். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் இயங்கத் தேவையான எரிபொருள் உள்ளதாகக் கூறப்படுகிறது. பொருத்தமான இந்த இடத்திலிருந்து ஜேம்ஸ் தொலைநோக்கி அகச் சிவப்பு நிறம் கொண்டு விண்வெளியை  நோக்கும். மனிதர்கள் அகச் சிவப்பு நிறத்தை வெப்பமாக உணர்கிறார்கள். ஆகவே நாமும் விண்வெளியை வெப்பப் பார்வையால் காண்கிறோம். விண்வெளியிலுள்ள வெப்பநிலையை ஒத்து இந்த தொலைநோக்கியின் பாகங்களும் -233 செல்சியஸ் டிகிரியில் வைக்கவேண்டும். எல்லா தயாரிப்புகளும் முடிந்து அது எடுக்கப் போகும் முதல் படம் எது என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்களாம். ஜூபிடர் முதல் தொலைதூர விண்மண்டலங்கள் வரையிலும் நட்சத்திர உருவாக்கங்கள் முதல் கருந்துளை வரையிலும் இது ஆய்வு  செய்யுமாம். ஐன்ஸ்டைனின் ‘கால நீட்சி’ என்பது மிக அதிக வேகத்தில் செல்லும்போது அல்லது மிக அதிக ஈர்ப்பு விசையின் அருகில் செல்லும்போது ஏற்படுகிற  கால  இடைவெளி நீட்சிகளைக் குறிக்கிறது. இப்போது அளத்தல் அறிவியலின் ஒரு சாதனையாக இதை செய்துகாட்டியிருக்கிறார்கள். ஒரு மில்லிமீட்டர் இடைவெளியில் வைக்கப்பட்டிருந்த இரண்டு நுண்ணிய அணுக் கடிகாரங்கள் வெவ்வேறு நேர இடைவெளியில் சுழன்றன. 

5 மீதேன் கசிவு அபாயம் 

உலகில் சிறு எண்ணிக்கையிலான நாடுகளே அதிக அளவில்  மீதேன்  வாயுவை வெளியிடுகின்றன என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  மொத்த மீதேன் வாயு அளவில் 12% இந்த நாடுகளால் உண்டாகின்றது. 2019,2020 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில் துர்க்மேனிஸ்தான்,ரசியா,அமெரிக்கா, இரான்,கசகஸ்தான்,மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளிலுள்ள 1800 இடங்களிலிருந்துதான் மிகப் பெரும் அளவில் மீதேன் வெளிவிடப்படுகின்றது என்பது தெரியவந்துள்ளது. இந்த உமிழ்வு களை தடுப்பது பூவுலகிற்கு ஒரு பெரும் வரம் என்பது மட்டுமல்ல இந்த நாடு களுக்கும் கோடிக்கணக்கான டாலர்களை மிச்சப்படுத்தும் என்கிறார்  பருவநிலை அறிவியலாளர் தாமஸ் லவாக்ஸ். இயற்கை எரிவாயுவின் முக்கிய பகுதி  மீதேன்தான்.ஒரு மணி நேரத்தில் 25  மெட்ரிக் டன் மீத்தேனை காற்று  மண்டலத்தில் திடீரென விடக்கூடிய இடங்களை ‘தீவிர உமிழ்வு’ (ultra emitters) என வகைப்படுத்தியுள்ளனர். இந்த பிரம்மாண்ட வெடிப்புகள் எப்போ தாவதுதான் நடைபெறும் என்றாலும் காற்று மண்டலத்தில் கலக்கும் மீதேன் அளவில் இவை கணிசமானது.இப்படிப்பட்ட கசிவுகளை நீக்குவது மொத்த மீதேன் உமிழ்வைக் குறைப்ப தில் பெரிய அளவிலான முதல் படியாக இருக்கும். கார்பன்டை ஆக்ஸைட் காற்று மண்டலத்தில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இருக்கும்.மீதேன் 10-20 ஆண்டுகளே இருக்கும் என்றாலும் அதைவிட 80 மடங்கு வெப்பமாக்கும் திறன் உடையது மீதேன்.

 6  பேச்சும் இசையும் 

மனித மூளையிலுள்ள செவிப்புலனை உணரும் பகுதியிலுள்ள சில நரம்பு இழைகள் குரல் மற்றும் கருவி இசையை சேர்ந்து கேட்கும்போது   ஒளிர்கின்றனவாம்.ஆனால் தனித்தனியாக பேச்சையும் இசையையும் கேட்கும்போது ஒளிர்வதில்லை.’current biology’  என்கிற இதழில் வெளிவந்துள்ள ஆய்வு இந்த முடிவைக் காட்டியுள்ளது. மூளையின் செவிப்புலன் பகுதியில்  வெவ்வேறு பணிகள் நுட்பமாகப் பிரிக்கப்பட்டிருப்பதை இது காட்டுகிறது.எம்ஆர்ஐ மற்றும் எலெக்ட்ரோ கார்டிகோ கிராபி சோதனைகளைப் பயன்படுத்தி இந்த சோதனையை செய்துள்ளனர்.