tamilnadu

img

கவிஞர் தமிழ்ஒளி புகழ் பரப்பிய செ.து.சஞ்சீவி காலமானார்

சென்னை, மே 20- கவிஞர் தமிழ்ஒளி மறைவுக்குப் பின் 60 ஆண்டு காலம் அவரது புகழ் பரப்பி வந்த செ.து.சஞ்சீவி (94) சென்னையில் சனிக்கிழமை (மே. 20)   காலமானார்.  17.10.1929ஆம் ஆண்டு துரைசாமி - அங்கம்மாள் தம்பதிக்கு பிறந்த சஞ்சீவி, 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. இளம் வயதிலேயே பெரி யாரின் பேச்சாலும் கம்யூ னிஸ்ட் தலைவர் கே.எஸ்.பார்த்தசாரதியின் போர்க் குணத்தாலும் கவரப்பட்டார்.  தமிழ் மீதான ஆர்வத்தால் பாரதிதாசன் கவிதைகளில் ஈடுபாடு கொண்டார். அவர்  வழியாக கவிஞர் தமிழ்ஒளி யைக் கண்ட சஞ்சீவி, தமிழின் முதல் தலித் காவியம் என்று  போற்றப்படும் வீராயி காவியத்தின் வீரிய கவிதை வரிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.  அதன் பின்னர் அமைந்த கரை பகுதியில் தாம் நடத்தி வந்த கடைக்கு கவிஞர்  தமிழ்ஒளியை அழைத்து வந்து தோழமை நட்பு பாராட்டினார்.  கவிதைகளால் வாழவைத்தவர்  கவிஞர் தமிழ்ஒளியின் அகால மரணம் சஞ்சீவியை பெரிதும் பாதித்தது. தமிழ் ஒளியை அவரது கவிதை களால் வாழவைப்பது என்று தீர்மானித்த அவர், தமிழ்ஒளியின் நூல்களை தேடித்தேடி பதிப்பித்தார். டாக்டர் மு. வரதராசனார், பன்மொழிப்புலவர் க.அப்பா துரையார் ஆகியோரிடம் நூல்களுக்கு முன்னுரை பெற்று கவிஞரின் புலமை யையும் இலக்கிய ஆளுமை யையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார்.

 அரசு விழாவாக கொண்டாட பெரும் முயற்சி எடுத்தவர் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ஒளியின் பிறந்த நாள், நினைவு நாள் கூட்டங்களை தமுஎகச, கலை இலக்கிய பெருமன்றம், போன்ற வற்றின் உதவியுடன் நடத்தி வந்தார்.  புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் உதவியுடன் தமிழ்ஒளியின் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வழிவகுத்தார். தமிழ் ஒளி மீதான  ஈடுபாட்டை அங்கீகரிக்கும் விதமாக சாகித்திய அகாதமி, அவரது வரலாற்றை சஞ்சீவியைக் கொண்டு எழுத வைத்தது. தமிழ்ஒளி நினைவாக சில  பதிவுகள் என்ற கட்டுரை  தொகுப்பையும் வெளியிட் டுள்ளார்.  தமிழ்ஒளி நூற்றாண்டு விழா வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் அவரது புகழ்ஒளி மங்காமல் காத்துவந்த செ. து. சஞ்சீவி காலமாகி விட்டார். அவருக்கு மனைவியும், 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இவர்களின் விருப்பப்படி சஞ்சீவியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.  இன்று இறுதி நிகழ்ச்சி  சஞ்சீவியின் உடல், எண் 48, பிள்ளையார் கோயில் தெரு, (பச்சையப்பன் கல்லூரி அருகே) செனாய் நகர் சென்னை-30 என்ற முக வரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  அவரது உடல் ஞாயிறு   (மே 21) மாலை 3 மணியள வில் இந்த முகவரியில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நுங்கம்பாக்கம் மயானத் தில் அடக்கம் செய்யப்படு கிறது.

;