tamilnadu

img

பண்பாட்டிபன் குரல், வரலாற்றின் குரல் மக்களவையில் எதிரோலிக்க சு.வெங்கசெடன் வெற்றி பெற வேண்டும்

தமிழர்களின் குரல், பண்பாட்டின் குரல், வரலாற்றின் குரல் மக்களவையில்எதிரொலிக்க மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு வாக்களியுங்கள் என மதுரை தொகுதி வாக்காளர்களை மதிமுக பொதுச் செயலாளர் கேட்டுக்கொண்டார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரையில்மதிமுக ஞாயிறன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வைகோ பேசியதாவது:- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் காவல்கோட்டம் என்ற நாவலை எழுதி சாகித்தியஅகாடமி விருது பெற்றவர். விகடன் இதழில்வேள்பாரி என்ற தொடரை எழுதி வரலாற்றை வெளிக் கொண்டு வந்தவர். இவரின் குரல் மக்களவையில் ஒலிக்கவேண்டும். மதுரை நகரம் ஒரு பண்பாட்டு தலைநகரம். புலவர்கள், பண்டிதர்கள், அறிஞர்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மதித்தபெருமை மதுரை மண்ணுக்கு உண்டு.

சு.வெங்கடேசன் இந்திய ஜனநாயக லிபர் சங்கத்தில் போர் சேவகனாகப் பணியாற்றியவர். 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழர்களின் நாகரீகத்தை கீழடியின் மூலம் வெளிக் கொண்டு வந்த

வர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர் சங்கத்தின் தலைவர். சிறந்த எழுத்தாளர். பண்பாட்டுத் தலைநகரான மதுரையிலிருந்து தமிழர்களின் குரல், பண்பாட்டின் குரல், வரலாற்றின் குரல் மக்களவையில் எதிரொலிக்க வேண்டும். இவர் வேட்புமனுத் தாக்கலின்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலையணிவித்தது குற்றமா? இதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. பாசிச மோடி அரசின் எடுபிடியாக எடப்பாடி அரசு செயல்படுகிறது. பாய்ந்து வரும் பாசிசத்தை வாக்குகளின் மூலம் நாம் தடுக்கவில்லையென்றால் நாடு ரத்தக் களறியாக மாறும். பாஜக கூட்டட் ஒரு சர்வாதி

காரக் கூட்டம். இவர்கள் ஆட்சியைஇழக்க விரும்பமாட்டார்கள்.


இதற்காக எந்த பஞ்சமாபாதகச் செயலையும் செய்வார்கள்.புல்வாமா தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.இந்தச் சம்பவத்திற்குப் பின் பாஜகவின் செல்வாக்கு வளர்ந்துள்ளதாக எடியூரப்பா கூறியுள்ளார். இது அவரது குரலா? அல்லது மோடியின் குரலா? நாட்டின் பாதுகாப்பையே மோடி அரசு பேரம் பேசிக்கொண்டிருக்கிறது. மேகதாதுவில் அணை கட்ட அனுமதித்தால் டெல்டா பகுதியில் விவசாயம் முற்றாக அழிந்துவிடும். தஞ்சைத் தரணியை அழிக்க, பாலைவனப் பிரதேசமாக மாற்ற எடப்பாடி அரசு முயற்சித்து வருகிறது.  அதற்கு எடப்பாடி அரசு துணைபோகிறது. விவசாயிகளின் நிலங்கள் சுமார் 25 லட்சம் ஏக்கர்களை அதானி, அம்பானி, வேதாந்தா மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்குவார்கள். அங்கு மீத்தேன், ஷேல்கேஸ், ஹைட்ரோ கார்பன் ஆகியவற்றை எடுப்பார்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கத் துடிக்கும் பாஜகமீண்டும் வெற்றிபெற்று விடக் கூடாது.மோடி அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக தமிழகத்தின் உரிமையை பலியிட்டு காவு

கொடுக்கிறது எடப்பாடி அரசு. கஜா புயல் பாதிப்பால் தென்னை விவசாயம் முற்றாக அழிந்துவிட்டது. 89 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்காக அனுதாபச் செய்திகூட பிரதமர் மோடி வெளியிடவில்லை. கஜா பாதிப்பிற்கு ரூ.15 ஆயிரம் கோடி தேவை என தமிழக அரசு கேட்டது. ஆனால் இரண்டு சதவீதம் கூட மத்திய அரசு கொடுக்கவில்லை.


கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன். வருடத்திற்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார் பிரதமர். ஆனால் இரண் டையும் செய்யவில்லை. ஜிஎஸ்டி வரி விதிப்பால் சிறு-குறுதொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான வர்த்தகர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு கிடைக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டுமென போராடியவர்கள் மீது கடந்தாண்டு மே 22-ஆம் தேதி காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில்ஸ்னோலின் என்ற மாணவி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இது ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை நினைவூட்டுகிறது. காவல்துறையை கூலிப்படையாக மாற்றி அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றது தமிழக அரசு. எடப்பாடி ஆட்சியில் குட்கா முறைகேடு தொடங்கி டெண்டர் வரை முறைகேடு என பட்டியல் நீள்கிறது. நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. ஒற்றைக் கலாச்சாரம் என்ற கொள்கையை முன்னிறுத்துகிறது பாஜக இந்துத்துவா பிடியிலிருந்து நாட்டை மீட்க மதுரை தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசனை வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு வைகோ பேசினார்.


மதுரையை மீட்டெடுப்போம்

முன்னதாக வேட்பாளர் சு.வெங்கடேசன் வாக்கு கேட்டு பேசினார். அவர் பேசுகையில் தொழில், கல்வி, வேலைவாய்ப்பில் மதுரை மிகவும் பின் தங்கியுள்ளது. பின் தங்கிய நகரத்தை மீட்டெடுப்போம். எது வளர்ந்திருக்கிறதோ இல் லையோ, கொசுக்கள் மட்டும் பெருகியிருக்கிறது. சமீபத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கு ஒன்றில், 39 வகையான கொசுக்கள் இருப்பதாகவும். அவை லிட்டர் கணக்கில் மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பின்னணிப்பாடகர் டி.எம். சௌந்தரராஜனின் 97-ஆவது

பிறந்த நாள் ஞாயிறன்று கொண்டாடப்பட்டுள்ளது. அவருக்கு ஒரு மணி மண்டபம் கூட தமிழக அரசு கட்டவில்லை என்றார்.இந்த பொதுக் கூட்டத்திற்கு மதிமுக மாவட்டச் செயலாளர் பொடா மு.பூமிநா

தன் தலைமை வகித்தார். மதுரை மாநகர்திமுக பொறுப்புக் குழுத் தலைவர் கோ.தளபதி, மதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் மார்நாடு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி உள்ளிட்ட தோழமைக்கட்சி நிர்வாகிகள் தலைவர்கள் உரையாற்றினர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம், மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், புறநகர்மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

;