tamilnadu

இசை பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை

சென்னை,டிச.24- திருக்கோயில் தவில், நாதஸ்வர பயிற்சி பள்ளிகளில் பயின்று வரும் 25 மாணவர்கள் உள்ளிட்ட  67 மாணவர்கள் பயன்பெறும் வகையில், உயர்த்தப்பட்ட உதவித்  தொகையான 3 ஆயிரம் ரூபாயினை  18 மாணவர்களுக்கு முதலமைச்சர் வழங்கி தொடங்கி வைத்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:- பழனி, மயிலாப்பூர் கோயில் வேதபாராயணர் பள்ளிகளில் பயின்று வரும் 18 மாணவர்கள், மதுரை, திருவண்ணாமலை ஓது வார் பயிற்சி பள்ளிகளில் பயின்று வரும் 24 மாணவர்கள் மற்றும் பழனி யில் தவில், நாதஸ்வர பயிற்சி பள்ளி களில் பயின்று வரும் 25 மாண வர்கள் என மொத்தம் 67 மாணவர்கள் பயன்பெறும் வகை யில், உயர்த்தப்பட்ட உதவித் தொகையான 3 ஆயிரம் ரூபாயை  18 மாணவர்களுக்கு தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைத்தார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ. இறை யன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும்  அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர  மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமர குருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;