tamilnadu

2022 மார்ச் 30, 31, ஏப்ரல் 1 மதுரையில் சிபிஎம் மாநில மாநாடு

வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டத்தில் ரூ.6 லட்சம் நிதியளிப்பு

மதுரை, டிச.12- மாநில உரிமைகளையும், மக்கள் உரிமைகளையும் ஒருசேர பறிக்கும் ஒன்றிய பாஜக அரசை வீழ்த்துவதை நோக்கி இந்திய அரசியலில் புதிய திருப்புமுனையை உருவாக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகள் அமையும் என்றும், தமிழக உழைப்பாளி மக்க ளின் நலன்களை காக்கும் மாபெரும் இயக்கமாக கட்சியின் வளர்ச்சியை வலுப்படுத்தும் விதமாக மதுரை யில் நடைபெறவுள்ள மாநில மாநாடு அமையும் என்றும் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

மதுரையில் மாநாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 23 ஆவது மாநாடுகள் நாடு முழு வதும் நடைபெற்று வருகின்றன. 2022 ஏப்ரலில் கண்ணூரில் அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. கட்சியின் தமிழ்நாடு மாநில 23 ஆவது மாநாடு 2022 மார்ச் 30, 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் மதுரையில் பேரெழுச்சியுடன் நடை பெற உள்ளது. மாநாட்டை வெற்றிகர மாக நடத்திட வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் மாநிலக்குழு உறுப்பினர் சி.ராமகிருஷ்ணன் தலை மையில் டிசம்பர் 11 சனிக்கிழமை யன்று மாலை நடைபெற்றது. வரவேற்புக் குழு நிர்வாகிகள் மாநில மாநாட்டு வரவேற்புக் குழு தலைவராக மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், செய லாளராக மா.கணேசன், பொருளாள ராக கே.ராஜேந்திரன், உதவித் தலை வர்களாக சி.ராமகிருஷ்ணன், இரா. விஜயராஜன், கே.வசந்தன், உதவிச் செயலாளர்களாக எஸ்.கே.பொன் னுத்தாய், எஸ்.பாலா, இரா.லெனின் ஆகியோரை உள்ளடக்கிய 178 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக் கப்பட்டது.

நிதியளிப்பு

வரவேற்புக் குழு கூட்டத்திலேயே கட்சியின் மதுரை மாநகர், புறநகர் மாவட்ட குழுக்களின் சார்பில் முதன்மை நிதியாக ரூ.5.85 லட்சம் கே. பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதா வது: மதுரையில், கட்சியின் 23 ஆவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள த வறான பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் விரோத, விவசாய விரோதக் கொள்கைகள், மாநில உரி மைகள் பாதுகாப்பு, எதிர்காலத்தில் தமிழகத்தில் முன்னெடுக்க வேண் டிய மக்கள் நலன் சார்ந்த பிரச்சனை கள் ஆகியவை மாநாட்டின் முக்கியக் கருப்பொருளாக அமையும். மூன்று நாள் மாநாட்டில், பொதுச்செயலாளர்  சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலை மைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்ற னர்.

23-ஆவது மாநில மாநாட்டுப் பணி கள் சனிக்கிழமை முதலே தொடங்கி விட்டது. மாநாட்டிற்கு இன்னும் 100 நாட் களே உள்ளன. மதுரை மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமத்தில் உள்ள வீடு களுக்கும், மதுரை நகரில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் மாநாட்டுச் செய்தியை கொண்டு சேர்க்க வேண்டும். வேளாண் சட்டங்களை எதிர்த்துப்போராடி வெற்றி பெற்ற விவசாயிகள் வீடுகளுக்கு திரும்பும் நாளில், மகாகவி பாரதியாரின் 140- ஆவது பிறந்த நாளில் மதுரையில் 23-ஆவது மாநில மாநாட்டு வர வேற்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது மகிழ்ச்சிக்குரியது. மதுரை வரலாற்றுத் தொன் மைக்கு மட்டுமல்ல; அரசியல் பாரம் பரியத்திற்கும் புகழ்மிக்க மண். விடு தலைப் போராட்ட வீரர்கள் தொடங்கி கம்யூனிஸ்ட் தியாகிகள் மாரி-மண வாளன், பொதும்பு பொன்னையா, வீரணன், தூக்கு மேடை தியாகி பாலு, கே.பி.ஜானகியம்மாள், வில்லாபுரம் தியாகி கு.லீலாவதி உள்ளிட்டோர் போராட்டக் களம் கண்ட புரட்சிகர பூமி மதுரை. மதுரை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு என தனிப்பெய ரும் புகழும் உள்ளது. விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா அரசி யல் நடத்திய மண். அவர் களமாடிய மதுரையில் சங்கரய்யாவின் நூற் றாண்டை கொண்டாடிக் கொண்டி ருக்கும் இந்தத் தருணத்தில் மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் வெற்றிச் செய்தியை கேட்க என்.சங்கரய்யா மகிழ்ச்சி யோடு காத்திருக்கிறார்.

பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகம் அமைத்திட...

சமூக ஒடுக்குமுறை, பாலியல் பிரச்சனைகள், மனித உரிமை மீறல் கள், தொழிலாளர், விவசாய விரோ தக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துவத்தோடு பணியாற்றி வருகிறது. ‘அகில இந்திய அளவில் ஒரே நாடு, ஒற்றைக் கலாச்சாரம்’ என அனைத்திலும் “ஒற்றை” என்ற நிலைக்கு நாட்டை பாஜக அரசு கொண்டு செல்கி றது. நாட்டின் பன்முகத்தன்மை, பன்முகக் கலாச்சாரத்தை பாது காப்பதிலும், அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதிலும் முன்னெப்போ தைக் காட்டிலும் கூடுதல் முனைப் போடு நாம் செயல்பட வேண்டும். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். 23-ஆவது மாநாடும்,  அதைத் தொடர்ந்து கண்ணூரில் அகில இந்திய மாநாடும் நடைபெற உள்ளது. அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்த லில் பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகத்தை கட்சி அமைக்க உள்ளது. இந்த மாநாட்டின் வெற்றி பாஜகவை வீழ்த்துவதில் தான் உள்ளது.

மாநில மாநாடும்- மூன்று கடமைகளும்

மதுரையில் மாநில மாநாடு நடை பெறுகிறது. இந்தத் தருணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மூன்று பிரதான கடமைகள் உள்ளன. ஒன்று மாநில மாநாட்டை வெற்றிகர மாக்குவது, இரண்டாவது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான இடங்களில் வெல்வது,  மூன்றாவது பிப்ரவரி மாதம் தொழிற் சங்கங்கள் நடத்தவுள்ள பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வது. இந்த மூன்று கடமைகளை யும் நாம் ஒருசேர நிறைவேற்ற வேண் டும். அதற்கான பலம் நமக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், “ராஜீவ் கொல்லப்பட்ட வழக்கில் ஏழு பேர் விடுதலையில் ஏற்கெனவே இருந்த  தமிழக ஆளுநர் இதுதொடர்பாக முடி வெடுக்காமல் சென்றுவிட்டார். தற் போது பொறுப்பேற்றுள்ள ஆளுந ருக்கு, தமிழக அரசு இரண்டு முறை அழுத்தம் கொடுத்துள்ளது. முடி வெடுக்க வேண்டிய ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. தமிழக அர சின் சார்பில் அழுத்தம் கொடுக்க வில்லை எனக் கூறுவது உண்மை இல்லை.

பாசிச மதவாத அரசியலை எதிர்ப் பதில் திமுகவுடன் இணைந்து போராடி வருகிறோம். மக்களுக்கு பாதிப்பு என்றால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும். மாரிதாஸ் கைது என்பது காலம் கடந்து நடைபெற்றுள்ளது. கடந்த ஆட்சியின் ஆதரவால் அவர் கைது  செய்யப்படாமல் இருந்தார். சமூக பதற்றத்தை உருவாக்குவது, தனி மனித தாக்குதல் மற்றும் பெண் களுக்கு எதிராகவும், நீதிமன்றத்தை அவமரியாதையாக பேசும்போதும் கடந்த ஆட்சியில் அமைதியாக இருந் தது போன்று தற்போதுள்ள அரசு அமைதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது என்றார். வரவேற்புக்குழு அமைப்புக்கூட் டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ. லாசர், எம்.என்.எஸ். வெங்கட்ராமன், மதுக்கூர் இராமலிங்கம், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநி லக்குழு உறுப்பினர்கள் க. சுவாமி நாதன், இரா. விஜயராஜன், எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ்.பாலா, மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

;