tamilnadu

img

மாநிலச் செயலாளர் மேசையிலிருந்து...

இந்திய விண்வெளி ஆய்வுமையத்தின்(இஸ்ரோ)  புதிய தலைவராக ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசை வல்லுநரான முனைவர் வி.நாராயணன் அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. தமிழ்நாட்டில் இருந்து மீண்டும் ஒருவர் இஸ்ரோ தலைவராக செயல்படுவது, பெருமையளிக்கிறது. இதன் மூலம் மாணவர்களிடம் அறிவியல் கல்வியின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அதே நேரத்தில், மோடி ஆட்சிக்கு வந்த பின், விஞ்ஞானிகள் பலரே அறிவியலுக்கு விரோதமான கருத்துக்களை பேசும் போக்கு உள்ளது.  அவ்வாறில்லாமல், விஞ்ஞானி நாராயணன் தலைமையில்‌ இஸ்ரோ மென்மேலும் பல சாதனைகள் படைத்து, அறிவியலின் பலனை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டுமென வாழ்த்துகிறோம்.