மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர் என்.ராமகிருஷ்ணன் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக் குழு உறுப்பினர்கள் செவ்வணக்கம் செலுத்தி இறுதிவிடையளித்தனர். (வலது) கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் தோழர் என்.ராமகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாலையணிவித்து, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள், அலுவலக ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.