tamilnadu

img

மின் ஊழியர்களை மிரட்ட துணை ராணுவத்தை குவித்த புதுவை அரசு

புதுச்சேரி, அக்.3- அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மின்துறை யை தனியாரிடம் தாரைவார்க்க முடிவு செய்து அதற்கான அரசாணையை புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் -பாஜக கூட்டணி அரசு வெளியிட்டுள்ளது. அரசின் இந்த முடிவை எதி ர்த்து மின்துறையின் பொறியாளர்கள், ஊழி யர்கள் என அனைத்து பிரிவினரும் கடந்த 6 வது நாளாக  மின்துறை தலைமை அலுவலக வளாகத்தில் போராடிவருகின்றனர்.

அண்டை மாநிலங்கள் 

புதுச்சேரி உப்பளம் பகுதியில் அமைந்து ள்ள மின்துறை தலைமை அலுவலகம் அரு கில் தொழிற் சங்கங்களின் கூட்டு நட வடிக்கைக் குழுத் தலைவர் அருள்மொழி தலை மையில் நடைபெற்று வரும் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டி யூசி  உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களும் மின்துறை ஊழியர்களுக்கு ஆதரவு தெரி வித்துள்ளன. மேலும், தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்க தலைவர்களும் புதுவை போராட்டத்தில் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

மிரட்டும் அரசுக்கு எச்சரிக்கை

புதுச்சேரியில் 6 வது நாளாக திங்களன்று (அக்.3) நடைபெற்ற வேலை நிறுத்த போராட்ட த்தில், தேசிய மின்சார வாரிய தொழிலாளர், ஊழியர் மற்றும் பொறியாளர் அமைப்பு களின் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாள ரும், சிஐடியு அகில இந்திய செயற்குழு உறுப்பினருமான பிரசாந்த் நந்திரி சவுத்ரி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தலைவர் எஸ்.ஜெய்சங்கர், துணைப் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், அகில இந்திய மின்சார வாரிய பொறியாளர் கூட்டமைப்பு தலைவர் சைலேந்திரதுபே, தமிழ்நாடு மின்சார ஊழியர் பெடரேஷனின் நிர்வாகி மூர்த்தி, தமிழ்நாடு மின்சார பொறியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெயந்தி ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், “புதுச்சேரி அரசு தனது முடிவை திரும்பபெறும் வரை அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடத்தப்படும்” என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

கைது

புதுச்சேரி மின்துறை தலைமை அலு வலகத்தில் போராடி வரும்  ஊழியர்கள் 700  பேரை ஞாயிற்றுகிழமை (அக்.2) இரவு என் ஆர்காங்கிரஸ்-பாஜக அரசு, வலுகட்டாயமாக கைது செய்தது. இவர்களில் 30 பேர் மீது  வழக்கும் பதிவு செய்துள்ளது. இரவு முழுவதும் மண்டபத்தில் அடைத்துவைத்த அரசு, திங்களனன்று (அக்.3) விடுவித்தது. 

துணை ராணுவம்

மின்துறை ஊழியர்கள், பொறியாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தை ஒடுக்க துணை நிலை ஆளுநரின் பரிந்துரையின் பேரில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் புதுச் சேரியில் குவிக்கப்பட்டுள்ளனர். தொண்ட மாநத்தம், வில்லியனூர், சேதராப்பட்டு, காலாப்பட்டு, மரப்பாளம் ஆகிய துணைமின் நிலையங்களில் துணை ராணுவப்படைகளை நிறுத்தி ஊழியர்களை மிரட்டும் போக்கை கையாண்டு வருகிறது. அரசின் அடக்கு முறைக்கு அஞ்சாமல் மீண்டும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஆதரவு

புதுச்சேரி அரசின் மின்துறை தனியாரிடம் விற்கும் முடிவை உடனே கைவிடக்கோரி சிஐடியு புதுச்சேரி பிரதேசத் தலைவர் என். பிரபுராஜ் தலைமையில் உப்பளம் தண்ணீர் தொட்டி எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிர தேச செயலாளர் சீனுவாசன், பொருளாளர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், மதிவாணன், ஜீவானந்தம், தினேஷ்குமார், பச்சைமுத்து உட்பட திரளானோர் ஆர்ப்பா ட்டத்தில் பங்கேற்றனர். இதேபோல், ஆதரவு தெரிவித்து தொலைத்  தொடர்பு ஊழியர்களும் புதுச்சேரி தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் போராட்டம் நடத்தினர். “புதுச்சேரியில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் அமலாகியுள்ளது. துணை ராணுவத்தினரையும் இறக்கி எஸ்மா சட்டத்தைக் காட்டி போராடும் மக்களையும், மின் ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அரசியல் கட்சியினரையும் ஆளுநர் தமிழிசை மிரட்டிப் பார்க்கிறார். இந்த அடக்குமுறை ஜன நாயக நாட்டில் எடுபடாது” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.